|
35
|
|
திருநுதல்
கிழித்த தனிவிழி நாயகன்
றாங்கிய கூடற் பெருநக
ரீங்கிது காண்முகத் தெழினகைக் கொடியே. |
(உரை)
கைகோள் : களவு, தலைவன் கூற்று
துறை : பதிபரிசுரைத்தல்
(இ-ம்.) இதனை, ஒன்றாத்
தமரினுந் (தொல். அகத். சக) எனவரும் நூற்பாவின்கண் அப்பாற் பட்ட ஒரு திறத்தானும்
என்பதன்கண் அமைத்துக்கொள்க.
35
: முத்து..............................கொடியே
(இ-ள்)
முத்துளழில் - முத்துப்போன்ற அழகையுடைய ; நகைக்கொடியே - பற்களையுடைய பூங்கொடிபோல்வாய்
என்க.
(வி-ம்.)
எழில் - அழகு, நகை : பல், கொடி : ஆகுபெயர்
1-4
: எரி ....................................... நோக்குக.
(இ-ள்)
எரி தெறற்கு அரியபொடி பொறுத்து இயங்கினை - நீ இதுகாறும் தீயும் வெப்பத்தால் வெல்லதற்கரிய
இப்பாலை நிலத்துப் பாற்பொடியின் வெப்பத்தினை எங்ஙனமோ பொறுத்துக்கொண்டு என்னொடு
நடந்தனை ; முகில் தலை சுமந்த - முகில்களைத் தன் தலையிலே சுமந்துள்ள ; ஞிமிறு எழுந்து
இசைக்கும் பொங்கருள் - வண்டுகள் எழுந்து முரலுகின்ற இச்சோலையினிடத்தே ; படுத்த
மலர்கால் பொருந்துக - நிலத்திலே பரப்பப்பட்டுள்ள மலரின்மேல் நின்காலை வைத்திடுக;
கருங்கடத்து எதிர்ந்த கொடும்புலிக்கு ஒதுங்கினை - நீ இதகாறும் கரிய பாலைக்காட்டினிடத்து
எதிர்த்த கொடிய புலிக்கு அஞ்சி ஒதுங்கா நின்றனையல்லையோ; வரியுடல் செங்கண் வரால்
இனம் எதிர்ப்ப- வரிகளையுடைய உடலினையும் சிவந்த கண்களையுமுடையவரால் மீன் கூட்டங்கள்
தம்மைத் தாக்குதலாலே; உழவக் கணத்தர் உடைவது நோக்குக - ஈண்டு உழவர் கூட்டத்திலுள்ளோர்
புறமிட்டோடுவதைக் காண்பாயாக என்க.
(வி-ம்.)
எரி - நெருப்பு. நெருப்பாலும் வெல்லுதற்கரிய வெப்பத்தையுடைய பொடி என்க. இயங்குதல்
- கடத்தல், முகில் தலைசுமந்த பொங்கர்-சோலை, படுத்த மலர்-பரப்பப்பட்ட மலர்.
கடம்காடு, அஞ்சி ஒதுங்கின என்க. வரி.-கோடு, வரால்- ஒருவகை மீன். கணத்தர் - கூட்டத்தார்.
உடைதல் - புறமிட்டோடுதல்
|