|
செவியேற்று அஞ்சினை
இனி ; குடுமிஅம் சென்னியர் கருமுகில் விளர்ப்பக் கிடைமுறை யெடுக்கும் மறையொலி கேள்மதி-
குடுமியையுடைய அழகிய தலையினையுடைய பார்ப்பனர் கரிய முகில்களும் நாணும்படி வேதப்பள்ளியில்
முறைப்படி ஓதாநின்ற வேதங்களினது ஓசையைக் கேட்டு மகிழ்வாயாக என்க.
(வி-ம்.)
தழல் - தீ, தலை - உச்சியுமாம், பரல் - பருக்கை, முரம்பு- மேட்டுநிலம் வளை - சங்கு.
தரளக் குவால் - முத்துக் குவியல், நெடிய அலகை இரதம் என்க. அலகை இரதம் - பேய்த்தேர்,
அஃதாவது கானல் நீர், வன்மீன்- முதலை, கயல் - ஒருவகை மீன், வன்மீன் என்றதனால்
கயலை மென்மீன் எனக்கொள்க, எனவே வன்மீனும் மென்மீனும் பொதுவாகக் கொண்டு வினைசெய்தலையுடைய
அகத்தையுடைய கிடங்கு என்க, கிடங்கு-அகழி. அதன் பெருமைகூறுவான் கிடங்கெனப் பெயரிய
கருங்கடல் என்றான். காகளம்- ஊதுகொம்பு. துடி - ஒருவகைத்தோற்கருவி. இது போர்க்களத்தே
முழக்கப்படுதலால் பூசற்றுடி என்றான் குடுமி - உச்சிக்குடுமி, இதனைச் சிகையென்பர்,
முகில் நம்முடைய முழக்கம் இவ்வேத முழக்கத்திற்கு நிகராகாது என்று நாணும் என்பது கருத்து
கிடை - பள்ளி, மதி : முன்னிலையசை.
23-28:
அமரர்.................................புதைப்ப
(இ-ள்)
அமரர்கள் முனிக்கணத்து அவை முன்தவறு புரிந்து - தேவர்களும் முனிவர்குழாமு்ம் முன்னொரு
காலத்தே தவறு செய்யத் தொடங்கியபடியால்; உடன் உமைகண் புதைப்ப-உடனே உமையம்மையார்
கண்களை மூடாநிற்ப; உமையும் ஆடகச் சயிலச் சேகரந் தொடர்ந்த - அவ்வுமையு்ம் பொன்மலைக்
குவட்டினைத் தொடர்ந்த ; ஒற்றை அம் பசுங்கழை ஒல்கிய போல - ஒன்றாகிய அழகிய மூங்கிலானது
அசைவதுபோல ; உலகு உயிர்க்கு உயிர் எனும் - உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உயிர்
என்று சொல்லப்படுகின்ற ; திருவுரு அணைந்து வளைக்கரங் கொடு கண் புதைப்ப - அழகிய
இறைவனுடைய திருமேனியை அணைந்து வளையலணிந்த தன் கைகளால் இறைவனுடைய கண்களை மூடாநிற்ப
என்க.
(வி-ம்.)
கணத்து அவை - கணமாகிய கூட்டம், அமரரும் முனிவரும் தவறாக உமை கண்களை மூட என்க. ஆடகச்
சயிலச் சேகரம் - பொன்மலைக் குவடு, கழை - மூங்கில், இது உமைக்கு உவமை. ஓல்குதல்
- அசைதல். இறைவன் உயிர்களுக்கெல்லாம் உயிராய் மருகுவன் என்பதனை.
உருவொடு கருவி
யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய்
வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன்
தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான்
வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே (சித்தி.
93) |
எனவரும் சித்தியாரானும்
உணர்க.
|