|
30
|
|
விண்டொட
வெழுந்து விழுந்திரைக் குழுவினை
யரிவினைக் கடங்கிய மலையினம் வரவெனக் |
|
|
|
குளிர்மணற்
கேணியுட் கொம்பினர் படர்ந்து
முயங்கிய வுள்ளம் போகி
மயங்கிய துறையின மொருங்குழி வளர்ந்தே. |
(உரை)
கைகோள் : களவு. தோழிகூற்று
துறை: வாய்மைகூறி
வருத்தந்தணித்தல்.
(இ-ம்.)
இதனை, நாற்றமுந் தோற்றமும் (தொல்.களவி-23) என வரும் நூற்பாவின்கண் ஆங்கு
அதன் தன்மையின் வன்புறை உளப்பட என்பதன்கண் அமைத்துக்கொள்க.
1-4:
திருமலர்..............................மான
(இ-ள்)
திருமலர் இருந்த முதியவன் போல - தாமரைப் பூவில வீற்றிருந்த யாவர்க்கும் மூத்தோனாகிய
பிரமனைப்போல; நால்முகம் கொண்டு அறி நன்னர் நெஞ்சு இருந்து - நான்கு முகங்களைக்கொண்டு
அறிவனவற்றையெல்லாம் அறிந்த நல்ல உள்ளத்திலே உறைந்து; வேறு அருள் பிறவி தோற்றுவித்து
எடுத்து-வேறாகிய அருளுக்குரிய பிறப்பினைப் பிறப்பித்துக் காட்டி; நில்ம் இரண்டு அளந்த-
நிலவுலகும் வானுலகும் ஆகிய இரண்டனையும் திருவடியால் அள்நத ; நெடுமுகில் மான - ஒருகால்
விளர்த்தலும் ஒருகால் கறுத்தலும் இல்லாத பெரிய முகிலாகிய திருமால்போல என்க.
(வி-ம்.)
திருமலர் - ஈண்டுச் சிறப்பால் தாமரை மலரைக் குறித்து நின்றது. அறி நெஞ்சு - அறிவனவற்றையெல்லாம்
அறிந்த நெஞ்சு. நிலம் இரண்டு- மண்ணும் விண்ணுமாகிய இரண்டு உலகங்கள். இரண்டும் எனல்வேண்டிய
முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. நெடுமுகில் என்றமையால் ஒருகால் விளர்த்தலும்
ஒருகால் கறுத்தலும் இல்லாத பெரிய முகில் என்று உரைக்கலாயிற்று, முகில்: ஆகுபெயர்.
5-11:
அரக்கர்.........................................பெருநகர்
(இ-ள்)
அரக்கர் தம் கூட்டம் தொலைத்து - அரக்கருடைய குலத்தை அழித்து ; நெய் உண்டு - நெய்யை
உண்டு ; களிறு உரிபுனைந்த கண்ணுதல் கடுப்ப - யானைத் தோலைப்போர்த்த சிவபெருமான்போல;
வில் எடுத்து ஒன்னலர் புரம் எரி ஊட்டி-பகைவருடைய முப்புரங்களையும் எரித்து ; இனைய-
இத்தன்மையதாக ; எவ்வுலகும் தொழுது எழு திருவேல் - எல்லா உலகமும்
|