|
தொழுதெழுதற்குக் காரணமான
அழகுள்ள வேற்படையையுடைய ; சரவணத்து உதித்த அறுமுகப் புதல்வன்-சரவணப் பொய்கையிற்
பிறந்தருளிய ஆறுமகங்களையுடைய இளைய பிள்ளையாராகிய முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள;
பரம் குன்று உடுத்த பயன்கெழு கூடல் பெருநகர்- திருப்பரங்குன்றை அணிந்துள்ள பயன்மிக்க
மதுரைமாநகரின்கண் என்க.
(வி-ம்.)
1-11. பிரமனைப்போல நான்முகங் கொண்டு அறிவன அறிந்து அவன் தாமரைப் பூவிருந்தாற்போல
நன்னர் நெஞ்சில் இருந்து திருமால்போல அரக்கரை அழித்து நெய்யுண்டு சிவன்போல ஒன்னலர்
புரம் எரயூட்டி எவ்வுலகும் தொழுதெழுதற்குக் காரணமான வேல் என்க. வேலின் செயலுக்கு மும்மூர்த்திகளின்
செயல் உவமை. பரங்குன்று-திருப்பரங்குன்று. பயன் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும்
உறுதிப் பொருள்கள், வில் எடுத்து என்பதற்கு மேருவில்லைத் தாங்கி என்றும் ஒளி வீசி
என்றும் சிலேடை வகையால் பொருள் கொள்க. புரம் என்பதற்கு முப்புரம் என்றும் பகைவர்
ஊர் என்றும் பொருள் கொள்க.
11-15:
திறைந்த..............................கிளைபோல்
(இ-ள்)
நிறைந்த சிறு பிறைச் சென்னியவன் - நிறைந்த இளம்பிறை யணிந்த சடையினை உடையவனும்
; மால் அயன்தெடி - திருமாலும் நான்முகனும் தேடாநிற்பவும் ; மறை அறிந்து அறியா -
வேதங்கள் அறிந்தும் முழுதும் அறிவொண்ணாத ; தன் உரு ஒன்றில் - தனது திருவுருவத்தின்
ஒருபாகத்தே ; அருள் உரு இருத்திய ஆதி நாயகன் - திருவருள் வடிவமாகிய சிபெருமானுடைய
; அகல் மலர் இணை கழல் நண்ணலர் கிளை போல் - விரிந்த செந்தாமரை மலர்போன்ற
இரண்டாகிய வீரக்கழலணிந்த திருவடிகளை நினையாத மடவோருடைய சுற்றத்தார் போலவும்
; என்க.
(வி-ம்.)
கூடற்பெருநகர் நிறைந்த பிறைச் சென்னியன் என்க. மால்-திருமால் அயன் - நான்முகன்,
தேடி - கே, மறை - வேதம், வேதம் இறைவனுண்மையை அறிந்தும் அவனியல்பை முழுதும் உணரமாட்டாமையின்
மறை அறிந்து அறியா உரு என்றார். ஒன்று - ஒரு கூற்றில், அருளுரு - அருட்பிழம்பாகிய
அம்மை. எனைக் கடவுளர்க்கெல்லாம் முதற்பெருங்கடவுள், ஆதலின் ஆதி நாயகன் என்றார்.
நண்ணலர் கிளைபோல மனம்திரிந்து எனப் பின்னர் இயைத்துக் கொள்க. நண்ணுதல் -ஈண்டு
நினைதல்.
17-25:
பிணர்...........................செறிந்தும்
(இ-ள்)
பிணர்முடம் தாழை விரிமலர் குருகு என - பொருக்கமைந்த முடம்பட்ட அடிப்பகுதியினையுடைய
வெண்டாழையின் விரிந்த மலரைக் கொக்கென்று கருதி ; நெடுங்கழி
|