|
குறுங்கயல் நெய்தலுள்
மறைந்தும் - நீண்ட கழியிலுள்ள குறிய கயல்மீன்கள் நெய்தல் மலரின்கீழே மறைந்தும்,
புன்னைஅம்பொதும்பர் குழைமுகம் குழைமுகம்- புன்னைமரச் சோலையின்கண் குழைகின்ற முகத்தினையுடைய
தளரின்கண் ; கருதிரை சுமந்து எறி வெள்தாளத்தினை - கரிய கடலலைகள் எடுத்தெறியாநின்ற
வெள்ளிய முத்துக்களை ; அரும்பு என கரும்பு இனம் அலர நின்று இசைத்தும் - புன்னை அரும்பென்று
கருதி வண்டினங்கள் அவை மலரும்படி நின்று இசை பாடியும் ; கலம் சுமந்து இறக்கும் கரிஇனம்
பொருப்ப என - மரக்கலங்கள் சுமந்து கொணர்ந்து கரையின்கண் இறக்குனிற் யானைக் கூட்டங்களை
மலைக்கூட்டம் என்று கருதி ; பருகிய முகில்குலம் படிந்து கண்படுத்தும் - கடல்நீரை உண்ட
முகிற்கூட்டம் அவற்றின்மேல் படிந்து துயில் கொண்டும் ; மின்பவளம் கவைகொடி வடவையின்
கொழுந்து என - மின்னா நின்ற பவளங்களின் கவைத்த கொடிகளை வடவைத்தியின் சுடர்கள்
என்று நினைத்து ; சுரிவளை குளிக்குநர் கலன்இடை செறிந்தும் - சுரிந்த சங்கம் குளித்தெடுக்கின்றவர்
அவற்றிற்கஞ்சித் தந்தொழிலை விட்டுத் தம்மரக்கலங்களில் எறியும் என்க.
(வி-ம்.)
பிணர் - பொருக்கு, முடம் - வளைவு, குருகு - கொக்கு, குருகென்றமையின் தாழை வெண்டாழை
என்பது பெற்றாம். நெடுங்கழிக் குறுங்கயல் என்புழிச் செய்யுளின்ப முணர்க். பொதும்பர்
- சோலை, புன்னையம் பொதும்பர் என்புழி அம் : சாரியை குழைமுகம் இரண்டனுன் முன்னது
வினைத்தொகை பின்னது எழுனுருபேற்ற பெயர். குழைகின்ற முகம் என்றும் தளிரின்கண் என்றும்
பொருள் கூறுக. தரளம் - முத்து, கரும்பு - வண்டு, கலம் - மரக்கலம், கரி - யானை, பொருப்பு
- மலை, கண்படுத்தல் - துயிலல், மின்பவளம் : வினைத்தொகை. கவை - கிளை, வடவை
- வடவைத்தீ.
26-33:
வெள்ளிற................................வளர்த்தே
(இ-ள்)
வெள் இற உண்ண விழைந்து - வெள்ளிய இறால் மீனைத்தின்ன விரும்பி ; புகு குருகு இனம்
- செல்கின்ற கொக்கினங்கள் ; கருங்கழிநெய்தலை காவல்செய் கண் என - கரிய கழியின்கண்
மலர்ந்துள்ள நெய்தற்பூவை அக்கழியினைக் காவல் செய்கின்றவர்களுடைய கண்கள் என்று
நினைத்து ; அரவு எயிறு அணிமுள் கைதையுள் அடங்கியும் - பாம்பின் பற்கள் போன்ற நெருங்கிய
முட்களையுடைய தாழைப்புல்லினூடே மறைந்தும் ; விண்தொட எழுந்து விழும் திரைக்குழுவினை-வானத்தைத்
தீண்டும்படி எழுந்து விழுகின்ற அலைக்கூட்டத்தை; அரி வினைக்கு அடங்கிய மலை இனம் வரவு
என - இந்திரன் மலைகளைச் சிறகரிந்த கொடுந்தொழிலுக்கு அஞ்சிக்கடலினூடு ஒளித்திருந்த
மலைக்கூட்டங்களின் வருகை என்று நினைத்து ; கொம்பினர்-
|