|
பூங்கொம்பு போன்ற
மாதர்கள்; குளிர்மணல் கேணியுள் படர்ந்தும் - குளிர்ந்த மணற்கேணியுள் புகுந்து மறைந்தும்;
துறைஇனம் - இவ்வாறு நெய்தற்றுறையிள்ளவை ; ஒருங்குழி வளர்ந்து - ஓரிடத்தே வளர்ந்திருந்தும்
; முயங்கிய உள்ளம் போகி - ஒன்றோடொன்று தழுவிய உள்ளம் மாறி மயங்கிய வகை போலவும்
என்க.
(வி-ம்.) இற - இறால்மீன்
. காவல்செய்கண் - காவல்செய்கின்றவர்களுடைய கண்கள் , எயிறு - பல், அரி - இந்திரன்,
அரிவினை - இந்திரன் மலைகளைச் சிறகரிந்த கொடுந்தொழில் கொம்பினர் - பூங்கொடி
போன்ற மகளிர் , மயங்கிய- மயங்கியவகை போலவும் என வருவித்தோதுக.
15-19:
தம்மனம்............................யாமே
(இ-ள்)
தம்மனம் திரிந்து - தமது மனம வேறுபட்டு ; நம் துறைவன் தணக்க-நம்முடைய தலைவன் நம்மைவிட்டு
நீங்குதற்குக் காரணம்; யாம் அறிகிலம் -யாம் இன்னதென்று அறிந்தோமில்லை என்க.
(வி-ம்.)
(14) ஆதி நாயகன் கழவிணை நண்ணலர் கிளைபோல் (33) மயங்கிய துறைவன் மனந்திரிந்து
தணக்க அறிகிலம் என இயைத்துக் கொள்க. துறைவன்- நெய்தல் நிலத்தலைவன், தணக்கக்
காரணம் அறிகிலம் என வருவித்தோதுக. இனி இதனை, நாயகன் கழலிணை நண்ணலர் கிளை போலவும்,
துறையினம் குருகின மறைந்து்ம், அரும்பென இசைத்தும், பொருப்பெனப் படுத்தும், கொழுந்தனச்
செறிந்தும், கண்ணென வடங்கியும், வரவெனப் படிந்தும், ஒருங்குழி வளர்ந்து முயங்கிய
வுள்ளம் போகி மயங்கிய வகைபோலவு்ம், நந்துறைவன் மனந்திரிந்து தணந்ததை யாமறிகிலமென
வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|