பக்கம் எண் :

532கல்லாடம்[செய்யுள்73]



வறிய மானிட மகளிர் இல் அளித்தலும் சமயகட்குத் தேவ மகளிர் வீரமளித்தலும் அரக்கியர் கலைமகட்குக் கலைபயிற்றலும் நீரரமகளிர் நாக கன்னியர்க்கு நாகமணி வழங்குதலும்போல என முற் கூறிய உவமைகள் இப்பரத்தை வழங்க இத்தலைவி பெறும் பேற்றினுக்கு இல்பொருள் உவமையாகச் சொல்லப்பெறுவன அன்றி பொருந்தக் கூறும் உவமை ஒன்றும் இல்லை எனப்ாள் ஒன்றிய உவமம் இன்று என்றான்.

28-30: இவண்.................................தருமே

     (இ-ள்) இனி இவண் உள-இனி இப்பேற்றினுக்கு ஒரு காரணம் உளது என்னின் ; மற்றவன் தர - இழிந்தோளாகிய அப்பரத்தை வழங்குவாளேனும் ; இவள் நெடுங் கற்பே சென்று பெற்றான் என்பது தரும் - இப்பெருமகள் தானும் தனது நெடிய கற்பே காரணமாகக் கொண்டு தன் தோழியைரைச் செவ்வணி அணிவித்துச் செலுத்தித் தன் தலைவனைப் பெற்றாள் என்பது ஒருவாறு பொருந்தும் என்க.

     (வி-ம்.) பரத்தையர் வழங்கத் தலைவி தன் கணவனைப் பெறும் பேற்றினுக்கு உவமை கூறுதற்கு இல்லையாயினும் காரணம் கூறத்தகும். அஃதாவது அவள் கற்பே காரணமாக இப்பேற்றினை அவள் பெறுகின்றாள் என்று கூறலாம் என்பது கருத்து. தோழியின் செலவினை வேற்றுமை கருதாமல் தலைவி சென்றதாகக் கூறினான்.

     இனி இதனை, மாதவக்கூடல் மதிச்சடைக் காரணன் பதம் தேறா இருள உளம்போல் இவள் கொட்ப, அயல் களிப்ப, திருமகட்கு மானிட மகளிர் இல்லளித்தனவு்ம், சயமகட்குத் தேவமகளிர் வீரம் அளித்தனவும், கலைமகளுக்கு அரக்கர் மகளிர் கலை கொடுத்தனவும், பாந்தளங் கன்னியர்க்கு நீரரமகளிர் மணி அருளிய தெனவும் பொருந்தா உவமை கூறுவதன்றி ஊரனை அவள்தர இவள் பெறும் பேற்றுக்குப் பொருந்தும் உவம் இன்று.

     இனி கூற்றுனவாயின் இவள் கற்பே துணையாகச்சென்று இப்பேற்றினைப் பெற்றாள் என்பது தகும் என வினைமுடிவு செய்க. மெ்ய்ப்பாடு - அழுகை, பயன்- தலைவியைத் தேற்றுதல்.