|
மகளிர் போர்முகத்தே
வந்து அவ்விடத்தே வீரத்தைக் கொடுத்த பின்வு இறப்பது போலவும் என்க.
(வி-ம்.)
இவள் என்றது, தலைவியை, அயல் : ஆகுபெயர், அயலராகிய பரத்தையர் என்க. அரும்பொருட்செல்வி
என்றதனால் நல்கூர்ந்த மானிட மகளிர் எனப்துங் கொள்க. உலகுவின் : உம்மைத் தொகை.
நடுங்கச் செய்கின்ற சயமகள் என்க. சயமகள் - கொற்றவை. செருமுகம் - போர்க்களம்,
வீரம் - மறப்பண்பு. விளிவது - இறப்பது.
21-24:
இருள்...............................எனவும்
(இ-ள்)
இருள் உடல் அரக்கியர் - இருளையொத்த உடம்பினையுடைய அரக்கமகளிர் ; கலைமகள் கண்டு
- கலைகட்கெல்லாம் தெய்வமாகிய நாமகளைக் கண்டு அவட்கு ; தென்தமி்லும் வட சொல்லாகிய
ஆரியத்திலும் ஒருசில சொறக்ளைக் கற்பித்தாற் போலவும் ; நீர் அர மகளிர் - நீரில்வாழும்
தெய்வ மகளிர் ; பாந்தள் அம் கன்னியர்க்கு - நாக மகளிர்க்கு ; ஆர் எரிமணி திரள்
அருளியது எனவும் - பொருந்திய நெருப்புப் போன்ற நாகமணிக் குவியலை வழங்கியது போலவும்
என்க.
(வி-ம்.)
கல்வியறிவில்லாத அரக்கியர் கலைமகளுக்குத் தென் கலையும் வடகலையும் கற்பித்தாற்போல
என்க. நீரர மகளிர் தம்பால் இல்லாத நாகமணியை நாககன்னியர்க்கு வழங்கினாற்போலவும்
என்க.
25-28:
செம்மலர்....................................இன்று
(இ-ள்)
செம்மலர் குழல் இவள் - சிவந்த மலரணிந்த கூந்தலையுடைய இத்தோழியானவள் ; போய்
அறிவுறுத்த - செவ்வணி அணிந்து சென்று அறிவியா நிற்ப; கற்றதும் கல்லாது உற்ற ஊரனை
- தான் கற்ற மெய்ந்நூற் பொருளை அறிந்தும் அறியாமல் அப்பரத்தையர் சேரியிலிருந்த
தலைவனை ; அவள் தர - அப்பரத்தை நன்கொடையாக வழங்கா நிற்ப ; இவள் பெறும் அரந்தை
அம் பேறினுக்கு-இத் தலைவி பெறா நின்ற துன்பத்திற்குக் காரணமான இப்பேற்றினுக்கு;
ஒன்றிய உவமம் இன்று - பொருந்திய உவமம் ஒன்றேனும் இல்லை ஆயினும் என்க.
(வி-ம்.)
செம்மலர் - தோழி செவ்வணி அணிந்து செல்வது தோன்ற செம்மலர்க் குழலிவள் என்றார்.
கற்றிருந்தும் அதற்குத்தக ஒழுகும் ஒழுக்கம் கல்லாதவள் என்பாள் கற்றதும் கல்லாது உற்ற
ஊரன் என்றாள். அவள் என்றது இழிந்தவளாகிய அப்பரத்தை என்பது படநின்றது. இவள் என்றது
ஏசாச்சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடிமகள் என்பதுபட நின்றது. கணவனை எய்துதல் பேறேயாயினும்
பரத்தை வழங்கப் பெறுதலின் துன்பம் தருவதொன்றாய் இருந்தது என்பாள் இவள் பெறும்
அரந்தைபேறு என்றாள். திருமகளுக்கு
|