பக்கம் எண் :

530கல்லாடம்[செய்யுள்73]



மாஉடைக் கூற்றம் - மாமரமாகிய சூரபதுமனைக் கொல்லுகின்ற கூற்றவனும் ; மலர் அயன் தண்டம் - தாமரைமலரின் மேலிருக்கும் நான்முகனைத் தண்டித்தவனும்; குறுமுனி பெருமறை-அகத்திய முனிவர் பயின்ற பெரிய மந்திரப்பொருளானவனும்; நெடுமறை பெறாமுதல் - நெடிய வேதம் அறியப்பெறாத முதற் கடவுளும்; குஞ்சரக்கோதையும் குறமகட்பேதையும் இருந்தன இருபுறத்து எந்தை-தெய்வயானை நாய்ச்சியாரும் வள்ளிநாய்ச்சியாரும் வீற்றிருக்கப்பெற்றனவாகிய இரண்டு பக்கங்களையுமுடைய எம்தந்தையானவனும்; என் அமுதம்-என்னுடைய அமிழ்தமானவனும் ஆகிய முருகப்பெருமான்; பிறந்து அருள் குன்றம் ஒருங்கு உறப்பெற்ற - தோன்றியருளிய திருப்பரங்குன்றமானது தன்னுடன் இருக்கப்பெற்ற; மாதவக்கூடல்-பெரிய தவத்தால் பெறுதற்குரிய மதுரையின்கண் எழுந்தருளியுள்ள; மதிச்சடைக்காரணன்-பிறையணிந்த சடையையுடைய உலகிற்கு நிமித்தகாரணனா யிருக்கின்ற சோமசுந்தரக் கடவுளின் ; இருபதம் தேறா - இரண்டு திருவடிகளின் பெருமையையும் தெளியாத ; இருள்உளம் ஆம் என - இருண்ட நெஞ்சம் ஆகுமென்று சொல்லும்படி என்க.

     (வி-ம்.) இறைவன் உயிர்களுக்கெல்லாம் உயிராய் இருத்தலின் பாருயிக்கோருயிர் என்றார். மா - மாமரமாகிய சூரபதுமன். அயன் - நான்முகன், குறுமுனி - அகத்தியன், மறைஅறியப்பெறாமுதல் என்க. குஞ்சரக்கோதை- தெய்வயானை - துறமகட் பேதை - வள்ளி, தெய்வயானையும் வள்ளியும் இருக்கப் பெற்றனவாகிய இருபால் எந்தை என்க. எந்தை - எந்தந்தை, பிறத்தல்-தோன்றுதல். காரணன் - நிமித்த காரணன். இருளுளம் : வினைத்தொகை.

14-20: இவள்......................................மானவும்

     (இ-ள்) இவள் உளம் கொட்ப - எந்தலைவியாகிய இவளுடைய நெஞ்சம் சுழலவும்; அயல் உளம் களிப்ப - அயலாராகிய பரத்தையர் நெஞ்சம் மகிழா நிற்பவும்; அரும்பொருள் செல்வி எனும் திருமகட்கு - பெறுதற்கரிய பொருள்களுக்கெல்லாம் தெய்வம் சொல்ப்படுகின்ற திருமகளுக்கு ; மானிடப் பெண்கள் எதிர்சென்று நின்று - எளியோராகிய மானிடப் பெண்கள் எதிர்சென்று நின்று ; புல் இதழ்தாமரை இல் அளித்து எனவும் - புறவிதழையுடைய தாமரைப்பூவால் இருப்பிடம் சமைத்துக் கொடுத்து இதன்கண் குடியிருந்திடுக என வழங்கினாற்போலவும் ; உலகு விண் பனிக்கும் ஒரு சமயகட்கு - நிலவுலகத்தையும் வானுலகத்தையும் நடுங்கச் செய்கின்ற ஒப்பற்ற வெற்றியையுடைய கொற்றவைக்கு; தேவர்தம் மகளிர் செருமுகம் நேர்ந்து வீரம் ஈந்தபின் விளிவது மானவும் - தேவ