|
1-3: மலரவன்..........................மடந்தை
(இ-ள்)
மலரவன் பனிக்கும் கவினும் - நான்முகன் இவ்வடிவு நம்மால் படைத்தற்கு அரிது என்று அஞ்சுதற்குக்
காரணமான பேரழகும் ; குலமீன் அருகிய கற்பும் - வடமீனாகிய அருந்ததியினுடைய கற்பும்
குறைந்ததென்று கூறுதற்குக் காரணமான சிறந்த கற்பும்; கருதி உள் நடுங்கி - நினைத்துப்
பார்த்து இப்பேறு நம்மாற் பெறுதற்கியலாதென மனம் நடுங்கி ; திருமகள் மலர்புகும் ஒருதனி
மடந்தை - திருமகளானவள் தாமரை மலரில் ஒளிதற்குக் காரணமான ஒப்பற்ற மங்கையே என்க.
(வி-ம்.)
மலரவன் - நான்முகன், பனித்தல் - நடுங்குதல், குலமீன் கற்பு என்க. கவினும் கற்புங்
கண்டு கருதிப்பார்த்துத் திருமகள் நடுங்கி மலர்புகுதற்குக் காரணமான மடந்தை என்க.
மடந்தை: விளி.
3-6:
இன்று...................................காதலர்
(இ-ள்)
இன்று - இற்றைநாள் ; இருகடல் ஓர்உழி மருவியது என்ன- இரண்டுகடல்கள் ஓரிடத்திலே
சேர்ந்தாற் போலச்சேர்ந்த ; செருபடை வேந்தர்- போர்செய்தற்குரி படைகளையுடைய
வேந்தருடைய ; முனைமேல் படர்ந்த நங்காதலர் - போரைக் கருதிச்சென்ற நம் தலைவருடைய
என்க.
(வி-ம்.)
ஓருழி - ஓரிடத்தில், செரு - போர், முனை - போர் முனை, படர்தல் - செல்லுதல்.
6-9:
முனை.........................கொண்டு
(இ-ள்)
முனைப்படை கனன்று - கூர்மை பொருந்திய படைக்கலமானது வெகுண்டு ; உடற்றும் - போர்செய்கின்ற
; எரியால் - நெருப்பால் ; முடம்படு நாஞ்சில் பொன்முகம் கிழித்த - வளைவுள்ள கலப்பையிற்
பொருந்திய இரும்பாற் செய்த கொழுவினது நுனியாற் கிழிக்கப்பட்ட ; நெடுஞ்சால் போகி
- நெடிய படைச்சாலின் வழியாகச் சென்று ; கடுங்கயல் துரக்கும் மங்கையர் - வேகமுள்ள
கயல்மீன்கள் தம்மை ஓட்டுகின்ற மகளிருடைய ; குழைபெறு வள்ளையில்- பொற்குழையணிந்த
செவியினையொத்த வள்ளைத்தண்டின்கண் ; தடைகொண்டு- தடைபட்டு என்க.
(வி-ம்.)
சால் - படைச்சால், அஃதாவது கலப்பை உழுத சுகடு - குழை: ஆகுபெயர் - குழையணிந்த செவி
என்க. வள்ளை . ஒருவகை நீர்க்கொடி.
10-14:
அவர்................................பெற்று.
(இ-ள்)
அவர் கருங்கண் என - அம்மகளிருடைய கண்ணைப்போல; தழைகுவளை, பூத்த - தழைத்த குவளை
|