பக்கம் எண் :

536கல்லாடம்[செய்யுள்74]



மலர்ந்த ; இருள் அகச்சோலையுள்- இருண்டுள்ள சோலையினுள் ; இரவு எனத் தங்கிய - இராப்பொழுதென்று கருதித் தங்கப் பெற்றவை ; அதன் சேக்கையுள் வதிபெறும் செங்கால் வெள்ளுடல் ஓதிமம் -அச்சோலையில் கட்டிய கூட்டினுள் உறைகின்ற சிவந்த காலினையும் வெள்ளிய உடலையுமுடைய அன்னமானது; தன்னுடைய பெடையென-தன்னுடைய பெடையன்னம் என்று கருதி ; பறைவரத் தழீஇப்பெற்று - சிறகில் அகப்படத் தழுவிப் பெற்று என்க.

     (வி-ம்.) அவர் - அம்மங்கையர், தழைகுவளை பூத்த என்க. இரவு - இராப்பொழுது, தங்கிய : பலவறிசொல், வதிதல் - தங்குதல், ஓதிமம் - அன்னம். பெடை - பெண் அன்னம், பறை - சிறகு.

14-18: உவை......................................காட்டி

     (இ-ள்) உவை தம் கம்பலைக்கு ஆற்றாது - அவ்வன்னங்களின் ஆரவாரத்தைப் பொறாமல் ; அகன்று - அவ்விடத்தினின்று நீங்கி ; தேக்கு வழிகண்ட கால்வழி இறந்து - அச்சோலையின் தேன் பெருக்கமானது தனக்கு வழியுண்டுபண்ணிய வாய்க்கால் வழியே சென்று ; பாசடை பூத்த கொள்ளம் புகுந்து -பாசிமலர்ந்த குழைந்த சேற்றில் புகுதாநிற்ப ; வள்துறை வானத்து எழில்மதி காட்டி -மிக்க நீர்த்துளியைச் சிந்துகின்ற வானத்தின்கண் எழாநின்ற அழகிய திங்களைக் காட்டி என்க.

     (வி-ம்.) உவை - அவை, கம்பலை - ஆரவாரம், தேம் + கு = தேக்கு. தேன் தனக்கு வழிகண்ட கால் என்க, கால் - வாய்க்கால், பாசடை - பாசி, கொள்ளம்- குழைசேறு, உறை - மழைத்துளி திங்களை உவமையாகக் காட்டி என்க. (8) கயல் சால் போகி வள்ளையில் தடைகொண்டு சோலையுள் இரவெனத் தங்கப்பெற்றவை அதன் சேக்கையுள் வதியும் அன்னத்தால் தழுவப்பெற்று அவற்றின் கம்பலைக்குவெகுருவிக் கால்வழிசென்று (17) (புகுந்து) புகுதாநிற்ப என புகுந்தென்னும் செய்தேனெச்சத்தை செயவெனெச்சமாக்கி ; இயைத்துக்கொள்க.

18-23: நிறை............................கூடல்

     (இ-ள்) நிறைசூல்வளை உளைந்து - நிரம்பிய சூலினையுடைய சங்கு வயிறு வருந்தி ; இடங்கரும் ஆமையும் - முதலையும் ஆமையும் ; எழுவெயில் கொளுவும் - காலையில் எழாநின்ற இளவெயில் காய்கின்ற ; மலைமுதுகு அன்ன- மலையினது முதுகையொத்த ; குலைமுகடு ஏறி - செய்கரையின் உச்சியில் ஏறி; முழுமதி உடுகணம் அகவயின் விழுங்கி உமிழ்வனபோல - முழுத்திங்கள் விண்மீன் கூட்டங்களைத் தன்னுள்ளே விழுங்கி மீண்டும் உமிழப்படுகின்றன போல ; கரிமுகம் சூல்வளை தாளம் சொரியும் - கரிந்த முகத்தையுடைய சூல்கொண்ட அச்சங்குகள் முத்துக்களை