|
ஈனுதற்கிடனான ; பழனம்
கூடல் - கழனிகளையுடைய மதுரையினிடத்தே என்க.
(வி-ம்.)
முழுமதி - முழுத்திங்கள், உடுக்கணம் - விண்மீன் கூட்டம், உமிழ்கின்றன - உமிழப்படுகின்றன.
தரளம் - முத்து, (கஅ) நிரைவளை எழில்மதி காட்டி முகடேறித் தரளம் சொரியும் கூடல்
என முடித்துக்கொள்க.
24-25:
குவளைப்............................முகிழ்ப்ப
(இ-ள்)
குவளை நின்று அலர்ந்த - குவளைமலர் தங்கி விரிந்தாலொத்த; மறைஎழு குரலோன் - வேதம்
பிறத்தற்கு இடமாகிய மிடற்றினையுடைய சிவபெருமான் ; இமையவர் வேண்ட - தேவர் வேண்டுதலால்
; ஒரு நகை முகிழ்ப்ப-ஒரு புன்முறுவல் தோற்றுவிப்ப என்க.
(வி-ம்.)
குவளைமலர் இறைவனுடைய மிடற்றில் அமைந்த கறைக்கு உவமை. குரல்-மிடறு. ஒரு நகை என்றது
சினத்தாற்றோன்றிய புன்முறுவலை.
26-29:
ஓருழி........................................மதிலே
(இ-ள்)
ஓருழி கூடாது - ஓரிடத்தே பொருந்தியிராமல ; உம்பரின் படர்ந்து- வானத்திலே யாண்டும்
இயங்கி ; வான் உடைந்து உண்ணும் மறக்கொலை அரக்கர் -தேவர்களை அழித்துக் கொள்ளைகொண்டுண்ணுகின்ற
கொடிய கொலைத்தொழிலை யுடைய அரக்கர்களுடைய ; முப்பெருமதில் பெற்றன அன்றோ - மூன்றாகிய
பெரிய மதில்கள் பட்டபாடுபடும் அல்லவோ, முன் அந்நெருப்புக்கெதிரே ; மருவலர் அடைந்த-பகைவரால்
அடைக்கப்பட்ட; மறம் கெழுமதில்- வலிமைபொருந்திய மதில்கள் என்க.
(வி-ம்.)
(5-6) செருப்படைவேந்தர் முனைமேல் படர்ந்த நங்காதல் முனைப்படைகனன்று உடற்று எரியால்
(26) மருவலர் அடைந்த மதில் (24) குரலோன் நகைமுகிழ்ப்ப (25) அரக்கர் முப்பெருமதில்
(27-28) பெற்றன அன்றோ என இயையும். ஓருழி - ஓரிடம் வான் : ஆகுபெயர், முப்பெருமதில்
- திரிபுரம். மருவலர் - பகைவர் நந்தலைவர் வினைமுற்றிக் கடிதில்மீன்வர் என்பதுபட
மருவலர்மதில் முப்புரங்கள் பட்டபாடுபடும் என்றாள்.
இதனை,
மடந்தையே ! முனைமேற் படர்ந்த காதலரது படையுடற்று மெரியால் எதிரே மருவலரடைந்த மறங்கெழு
மதிலானது கூடல் மறையெழு குரலோன் ஒருநகை முகிழ்ப்ப அரக்கர் மும்மதில் பெற்றபடியாகுமன்றோவென
வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|