பக்கம் எண் :

540கல்லாடம்[செய்யுள்75]



(உரை)
கைகோள் : கற்பு. தோழி கூற்று

துறை: கலக்கங்கண்டுரைத்தல்

     (இ-ம்.) இதனை “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. க) எனவரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபடவந்த கிளவி, என்பதனால் அமைத்துக்கொள்க.

30: இவட்கு...................................

     (இ-ள்) இவட்கு - எம்பெருமாட்டியாகிய இவளுக்கு என்க.

     (வி-ம்.) இவள் என்றது எம்பெருமாட்டியாகிய இவளுக்கு என்பதுபடநின்றது.

1-3: பெருந்துயர்...............................சாற்ற

     (இ-ள்) பெருந்துயர் அகற்றி - மாந்தரின் உளத்தில் உறையும் பெரிய துன்பத்தை நீக்கி ; அறம் குடிநாட்டி - அறப்பண்பினை நெஞ்சின்கண் குடியாக இருத்தி ; உளச்சுருள் விரிக்கும் - நெஞ்சின் சுருக்கத்தை மலர்வியாநின்ற ; நலத்தகு கல்வி ஒன்று உளது - நலஞ் செய்யும் தகுதியையுடைய ; கல்வி என்னும் பொருள் ஒன்று உளது ; என குரிசில் ஒரு மொழி சாற்ற - என்று நம்பெருமான் சொன்ன ஒரு மொழியை யான் சொல்லுமளவிலே என்க.

     (வி-ம்.) ஒதற்குப் பிரியக்கருதும் தலைவன் அக்கருத்தினை மெல்ல வெளிப்படுப்பான் தோழியை நோக்கி மாந்தர் தேடுதற்குரிய பொருள் ஒன்று உளது ; என குரிசில் ஒரு மொழி சாற்ற - என்று நம்பெருமான் சொன்ன ஒரு மொழியை யான் சொல்லுமளவிலே என்க.

     (வி-ம்.) ஓதற்குப் பிரியக்கருதும் தலைவன் அக்கருத்தினை மெல்ல வெளிப்படுப்பான் தோழியை நோக்கி மாந்தர் தேடுதற்குரிய பொருள் ஒன்று உளது ; அது துயரகற்றும் ; அறத்தை நெஞ்சில் நாட்டும் . உளச்சுருள் விரிக்கும் . என்று கூறினானாக, அக்குறிப்புணர்ந்த தோழி அவன் கூற்றினைத் தலைவிக்குக் கூறுகின்றான் என்க. இதனோடு

“அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
 புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன்
 றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை
 சிற்றுயிர்க் குற்ற துணை ”              (நீதிநெறி. உ. கல்வி)

எனவரும் வெண்பாவையும் நினைக. குரிசில் - தலைவன்.

4-8: பேழ்வாய்............................கவிந்து

     (இ-ள்) பேழ்வாய் கொய்யுளை அரி சுமந்து எடுத்த - பெரிய வாயையும் கொய்தாலொத்த பிடரிமயிரினையுமுடைய சிங்கத்தினாலே சுமந்து தாங்கப்பட்ட ; பல்மணி ஆசனத்து இருந்து - பலவாகிய மணிகள் பதித்த இருக்கையில் எழுந்தருளி