பக்கம் எண் :

மூலமும் உரையும்541



யிருந்து ; செவ்வானின் நெடுஞ்சடை குறுஞ்சுடர் நீக்கி - செக்கர் வானம் போன்ற நெடியாசடையையும் குறிய பிறையையும் அகற்றி ; ஐந்து அடுக்கிய ஆறு ஐஞ்நூறொடு - ஐந்து என்னும் எண்ணால் பெருக்கப்பட்ட மூவாயிரத்தாலாகிய பதினையாயிரம் என்னும் எண்பெற்ற ; வேறு நிலை அடுத்த - வேறுவேறான வரிசை பொருந்திய ; பல்பணி மிளிர்முடி - பல்வேறு மணிகளோடு விளங்காநின்ற திருமுடியை ; பலர் தொழக் கவித்து - பலரும் வண்ங்கும்படி அணிந்து என்க.

     (வி-ம்.) பேழ்வாய் - பெரிய வாய், கொய்யுளை ; வினைத்தொகை, உளை- பிடரிமயிர், அரி - சிங்கம், அரிசுமந்தெடுத்த ஆசனம்-சிங்காசனம், சடைக்கற்றைக்கு செக்கர்வானம் உவமை. நெடுஞ்சடைக் குறுஞ்சுடர் என்புழிச் செய்யுளின்ப முணர்க.

6-12: பஃறலை..............................நிமலன்

     (இ-ள்) பல்தலை பாந்தள் - பலவாகிய தலைகளையுடைய அதிசேடன் என்னும் பாம்பிற்கு ; சுமை - சுமையாகிய நிலவுலகத்தை ; திருத்தோளில் தரித்து- தனது அழகிய தோளிலே தாங்கி ; உலகு அளிக்கும் திருத்தகு நாளில்- உலகின்கணுள்ள உயிர்களைப் பாதுகாவா நின்ற செல்வம் மிக்க நாளிலே ; அருளுடன் திருவயிற்று நெடுநாள் இருந்த உக்கிரன் பயந்து அருள் நெடுஞ்சடை நிமலன் - திருவருள் உருவமாகிய சடாதகைப் பிராட்டியாரது அழகிய வயிற்றில் நெடுநாள் தங்கியிருந்த உக்கிர பாண்டியனைப் பெற்றருளிய நெடிய சடையையுடைய தூயோனாகிய சோமசுந்தரக் கடவுள் என்க.

     (வி-ம்.) அருள் - ஈண்டு அருளுருவமாகிய தடாதகைப் பிராட்டியார் என்க. அருளுடன் என்புழி உடன் உருபு மயக்கம். நெடுஞ்சடை நிமலன் என மாறுக நிமலன் - அழுக்கற்றவன், எனவே தூயோன் என்பதாயிற்று.

13-17: மற்றவன்................................நாயகன்

     (இ-ள்) மற்றவன் தன்னால் - அந்த உக்கிரபாண்டியனால் ; வடவையின் கொழுந்து சுட்டு - வடவைத்தீயின் கொழுந்தானது சுட்டனால் ; வளைக்குலம் ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும் விளர்த்து நின்று - சங்கினங்கள் பொறாமல் தமதுடலும் சுடருகின்ற முத்தமும் வெளிற நின்று ; அணங்கி முழங்கும் கருங்கடல் - வருந்தி ஒலித்தற்கிடமாகிய பெரிய கடலானது ; ஒருங்கு பொரிய வேல்விடுத்த - ஒருசேர வெந்து பொரியும்படி வேற்படையை எறியச்செய்த ; அதற்கு -அச்செயலுக்கு ; அருள்கொடுத்த முதல் பெருநாயகன் - திருவருள் வழங்கிய யாவர்க்கும் முதல்வனாகிய பெரிய கடவுளாகிய சிவபெருமானாகிய என்க.