பக்கம் எண் :

மூலமும் உரையும்547



தீயை வளர்த்தனர் என்க. அங்ஙனமே அமரர் அவியுண்ணற் பொருட்டன்றி அத்தீயினை அணுகினர் என்க.

9-14: முன்....................பெரும்பதியினும்

     (இ-ள்) இடைக்காடன் முன் எழபின் நடந்து-இடைக்காடன் முன்னொரு காலத்தே சென்றபோது அவன் பின்னே சென்று; நோன்பு உறு விரதியர் நுகர உள் இருந்தென-தவம் செய்கின்ற துறவோர் நுகர்ந்து இன்புறும்படி அவர்கள் உள்ளத்தில் அமுதமாக இருந்தாற்போல; நெஞ்சகம் நிறைந்து-அடியார் நெஞ்சினிடத்தே நிறைந்திருந்து; நினைவினுள் மறைந்து-அவர்கள் நினையும் நினைவினுக்கும் நினைவாய் மறைந்திருந்து; புரை அரும் அன்புனர் விழிபெற ஒப்புக்காண்டலரிய-அன்பினையுடைய அவ்வடியார் கண்கூடாகக் காணும்படி; தோற்றி-நல்லாசிரியன் உருவம் கொண்டு அவர்முன் தோன்றி; வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டி-தேவர்களுடைய நீண்ட முடிகளிலுள்ள மாணிக்கத்திரள்களைச் சேர்த்து; பதுக்கைசெய் அம்பலம் திருப்பெரும் பதியினும்-மேடாக்குகின்ற பொன்னம்பலமாகிய பெரிய திருப்பதியினிடத்தும் என்க.

     (வி-ம்.) இடைக்காடன் முன்எழ என்புழி முன் முற்காலத்தில் என்பதுபட நின்றது. நோன்புறு விரதியர்-தவத்தோர். நுகர்தல்-உண்ணுதல். நினைவினுள் மறைதலாவது நினைவினுக்கும் நினைவாய் மறைந்து நிற்றல். புரை-ஒப்பு. விழிபெறுதல்-கண்ணாற் காணப்பெறுதல். தேவர்கள் திரண்டு வந்து வணங்குங்கால் அவர் முடிகள் ஒன்றனோடொன்று தாக்குண்டு உதிர்ந்த மணிகள் பொன்னம்பலத்தை மேடாக்குதலால் வானவர் முடி மணித்தொகை திரட்டிப் பதுக்கை செய் அம்பலம் என்றார். பதுக்கை-மேடை; கற்குவியல்.

15-19: பிறவா..................காண

     (இ-ள்) பிறவாப் பேரூர் பழநகர் இடத்தும்-பிறவாமையைத் தருகின்ற பெரிய ஊராகிய பழைய காசி நகரிடத்தும்; மகிழ் நடம் பேய் பெறும் வடவனக்காட்டினும்- இன்பக்கூத்தைக் காரைக்காலம்மையார் பெற்ற திருவாலங்காட்டினிடத்தும்; அருமறை முடியினும்-உணர்தற்கரிய மறைநூலின் இறுதியிலும்; அடியவர் உள்ளத்தினும்-மெய்யடியார் நெஞ்சகத்தினும்; குனித்து அருள் நாயகன்-திருக்கூத்தாடியருளிய முதல்வனும்; குலம்மறை பயந்தோன்-சிறந்த வேதத்தை அருளிச்செய்தவனும் ஆகிய சிவபெருமான்; தமிழ்க் கூடல் பெருந்தவர் காண-செந்தமிழ் வளர்த்த மதுரை நகரத்தின்கண் பெரிய தவத்தினையுடைய பதஞ்சலி முதலியோர் காணும்படி என்க.

     (வி-ம்.) காசியில் இறந்தோர் மீண்டும் பிறவார் ஆகலின் காசியைப் பிறவாப் பேரூர் என்று கூறினார். மகிழ்-இன்பம். பேய்-