|
35
|
|
வின்பப்
பசுங்கொடி யிடப்பாற் படர
வெள்ளியங் குன்றம் விளங்கவீற் றிருந்த
முன்னவன் கூடன் முறைவணங் காரென |
|
40
|
|
வரவப்
பசுந்தலை யரும்பவிழ் கணைக்கா
னெய்தற் பாசடை நெடுங்காட் டொளிக்குங்
கண்ணெனக் குறித்த கருங்கயற் கணத்தை
வெள்ளுடற் கூர்வாய்ச் செந்தாட் குருகின
மரவெயி றணைத்தமுள் ளிலைமுடக் கைதைகள் |
|
45
|
|
கான்றலர் கடிமலர்க் கரந்துறைந் துண்ணுங்
கருங்கழி கிடந்த கானலங் கரைவாய்
மெய்படு கடுஞ்சுள் மின்னெனத் துறந்தவர்
சுவலுளைக் கவனப் புள்ளியற் கலிமா
னோக்க மறைத்த பரிதிகொ ணெடுந்தேர்ப் |
|
50
|
|
பின்னொடு சென்றவென் பெரும்பீழை நெஞ்சஞ்
சென்றுழிச் சென்றுழிச் சேறலு முளவோ
வவ்வினைப்பயனுழி யருந்தவம் பெறுமோ
விடைவழி நீங்கியென் னெதிருறுங் கொல்லோ
வன்றியு நெடுநா ளமைந்துடன் வருமோ |
|
|
|
யாதென
நினைக்கிலன் மாதோ
பேதை கொள்ளா தொழிமனங் கடுத்தே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று.
துறை: நெஞ்சொடு
வருந்தல்.
(இ-ம்)
இதற்கு, வரைவிடைவைத்த காலத்து வருத்தினும் (தொல். களவி. 21) எனவரும்
விதிகொள்க.
1-7:
வடமொழி...........................கதுவே
(இ-ள்)
வடமொழி விதித்த இசை நூல் வழக்குடன்-வடமொழியின்கண் வகுக்கப்பட்ட இசைநூல் முறைப்படி;
அடுத்தன எண் நான்கு அங்குலி அகத்தினும் நாற்பதிற்று இரட்டி நூல் அங்குலியினும்-பொருந்தியனவாகிய
முப்பத்திரண்டு விரல் அளவினும் எண்பத்து நான்கு விரல் அளவினும்; குறுமையும் நெடுமையும்
கோடல் பெற்று ஐதாய்-முறையே குறுக்கமும் நீட்சியும் கொள்ளுதலை யுடைத்தாய் அழகுடையதாய்;
ஆயிரம் தந்திரி நிறைபொது விசித்து-
|