பக்கம் எண் :

588கல்லாடம்[செய்யுள்82]



தானும் பற்றுதல் முதலிய தொழில் வேறுபாட்டால் மனம் சித்தம் புத்தி அகங்காரம் எனப் பலவகைப் படுதலின் என்மனம் என் செய்யுமோ என்று அறிகின்றிலேன். ஆதலால் மனமே! பேதை கொள்ளாதொழி எனக் கூறுதல் முரணன்மை யுணர்க.

     இதனை, முன்னவன் கூடல் வணங்காரென, கருங்கயற் கணத்தைச் செந்தாட் குருகினம் உண்ணும் கானலங்கரைவாய்க் கடுஞ்சூள் மின்னெனத் துறந்தவர் பரிதிகொ ணெடுந்தேர் பின்னொடு சென்ற நெஞ்சம், சேறலு முளவோ, அருந்தவம் பெறுமோ, இடைவழி நீங்கி எதிருறுங் கொல்லோ அன்றி யுடன்வருமோ, யாதென நினைக்கிலன், ஒழியென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.