|
புள்ளியற் கலிமா
எனத் தொல்காப்பியரும் (தொல். கற்பி. 53) ஓதுதல் காண்க. நோக்கம்-பார்வை.
பேரொளியினால் பார்க்க வொண்ணாதபடி செய்யும் உருளை என்றவாறு. பரிதி-உருளை. பீழை-துன்பம்.
47
- 52: சென்றுழி............................கடுத்தே
(இ-ள்)
சென்றுழி சென்றுழி-அந்தத் தேர் சென்ற விடந்தொறும் சென்ற விடந்தொறும்; சேறலும்
உளவோ-செல்லுதலும் உண்டோ; அ வினைப்பயன் உழி அருந்தவம் பெறுமோ-அல்லது அவர் சென்ற
தொழில் முடியுமளவும் செய்தற்கரிய தவத்தைச் செய்யுமோ; இடைவழி நீங்கி என் எதிர்
உறுங் கொல்லோ-அல்லது அவரைப் பின் தொடர மாட்டாமல் நடுவழியிலே விட்டு மீண்டும்
என் எதிரே வருமோ; அன்றியும் நெடுநாள் அமைந்து உடன் வருமோ-அங்ஙனமின்றி நெடுநாள்
அவருடனேயே இருந்து அவர் வருங்கால் கூட வருமோ; எது என மனம் கடுத்து நினைக்கிலன்-இவற்றுள்
எதனைச் செய்யுமோ என்று என் நெஞ்சே யான் ஐயுறுதலால் முடிவாக ஒன்றையும் நினைக்கின்றிலேன்;
பேதை கொள்ளாது ஒழி-ஆதலால் நீ பேதைமைப்படாமல் நிற்பாயாக; என்க.
(வி-ம்.)
அவர் தேர்ப்பின் சென்ற என்மனம் செல்லுமோ? தவம் செய்யுமோ? மீண்டும் என் எதிர்
வருமோ? அவருடன் வருமோ இவற்றுள் எதனைச் செய்யும் என யான் அறிகின்றிலேன் என்றவாறு.
இதன்கண் செல்லுதலும் தவம் செய்தலும் மீளலும் செய்யாத மனம் அவற்றைச் செய்வது போலக்
கூறுவதனை,
| |
நோயு மின்பமு
மிருவகை நிலையிற்
காமங் கண்ணிய மரபிடை தெரிய
வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய
வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன்
மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்
செய்ய மரபிற் றொழிற்படுத் தடக்கியு
மவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியு
மறிவும் புலனும் வேறுபட நிறீஇ
யிருபெயர் மூன்று முரிய வாக
வுவம வாயிற் படுத்ததுலு வுவமமோ
டொன்றிடத் திருவர்க்கு முரியபாற் கிளவி (தொல். பொருளி. 2) |
எனவரும் வழுவமைதியால்
அமைத்துக் கொள்க. உழி-இடம். கடுத்தல்- ஐயுறுதல். கடுத்தபின் றேற்றுதல் யார்க்கு
மரிது (குறள். 693) என்புழியும் அஃதப் பொருட்டாதல் உணர்க. மனந்
|