|
வருமாறு:- இறைவழிபாடு
செயதல், பணிவுடைடைமை, அருளுடைமை, மெய்ந்நூற் பயிற்சி, முற்றத்துறத்தல், மெய்ப்பொருளில்
அழுந்துதல், அடியாரொடு கூடுதல், பிறப்பிற்கஞ்சுதல் என்னும் இவ்வெட்டும் என்க.
36
- 38: நிலை..................................பெறுமை
(இ-ள்)
நிலை அருள் கற்பு என - நிலைமையான திருவருட் கற்பைப்போல; நெடுங்கற்புடையோள் -
நீங்காத பெரிய கற்பையுடைய எம்பெருமாட்டிக்கு; முன் உறின் - முன்னர் நீர் இவ்வண்ணம்
சென்றாயெனில்; அவள்மனம்-அப்பெருமகளது நெஞ்சம்; ஆங்கே நன்னரில் கொண்டு - அப்போதே
நன்மையை யுட்கொண்டு; குளிரும் பெறுமே - குளிர்ச்சியடையுமோ? நீயே கூறுதி! என்க.
(வி-ம்.)
நின்னைக் கண்டு என் நெஞ்சமே கொதிக்குமாயின் நின்னைக்கண்டுழி எம்பெருமாட்டியின்
நெஞ்சம் என்னாம் என்றவாறு. நீயே கூறுதி என்பது குறிப்பெச்சம். அருட்கற்பு என்றது
மெய்யடியார் அவனருளையன்றிப் பிறிதொன்றனையும் எண்ணாத ஒருமைப்பாட்டினை அஃது ஈண்டுத்
தலைவியின் கற்புக்கு உவமை. அவள் என்றது அப்பெருமகள் என்பதுபட நின்றது. நன்னர்-
நன்மை, குளிரும் பெறுமே என்புழி ஏகாரம் வினா, எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது.
இதனை,
நீயும் வையைநீர் விழவு புகுந்தனமென, மெய்யினை, பெயர்துறை பூனை: சேக்கொள் கண்ணை,
ஒன்றுடனில்லா மொழியை, கவிழ்ந்த முகத்தை, மனந்தோன்றா நகையை யன்றோ, நின்கேழ்கண்ட
என்னுள்ளம், கடல் பருகக் கொதித்த பெருந்தழற் றோற்றமுங் கடந்த தென்றால், கூடற்பெருமான்
மலைமகளொடு தன்குணமெட்டுந் தரித்தபடி யருச்சனை முதலிய எண்வகைக் குணங்களையும் தமக்கும்
படைக்கப்பெற்ற, அடியவரருட் கற்பெனக் கற்புடையோண் முன்னுறின் அவள் மனம் குளிரும்
பெறுமோ வென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு - அது. பயன் - தலைவனை இடித்துரைக்கு மாற்றால்
தலைவியின் ஊடல் தீர்தல்.
|