|
வயத்தே உடைமையும்;
முழுது அனுக்கிரகம் - பேரருளுடைமையும்; கெழுபரம்- முடிவிலாற்றலும்; அநாதி - தோற்றமின்மையும்;
பாசம் இலாமை - பற்றின்மையும்; மாசுஅறு நிட்களம் - குற்றமற்ற அருவமும்; அ விகாரக்குறி
- அழகிய உருவமும்; ஆகிய - இவையாகிய; தன்குணம் எட்டும் தரித்து - தன்க்கே உரிய
எட்டுக்குணங்களையும் தாங்கி என்க.
(வி-ம்.)
அணி பூண்ட கூடல், மறைபுகழும் கூடல் எனத் தனித்தனி கூட்டுக. வான்முதல் அனைத்தும் என்றது
வானம் முதலிய ஐம்பெருங்பூதங்களாலியன்ற உலகங்களையும் அவற்றின்கண் தோன்றி வாழும்
உயிரினங்களையும் என்க. அநாதி -தோற்றமின்மை, பாசம் - பற்று, நிட்களம் - அருவநிலை.
அவிகாரக்குறி என்றது சகளத்தை - சகளம் - உருவம். எண்குணம் - என்குணமாவன முற்றுமுணர்தல்,
அனைத்தும் தன்வயத்தேயுடைமை, பேரளுடைமை, அருவமாதல் என்பன. இனி இவற்றோடு பரிமேலழகர்
சைவாகமத்திற் கண்டு கூறிய எண்குணங்கள் தன்வயத்தனாதல், தூயவுடம்பினானாதல், இயற்கையுணர்வினனாதல்,
முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப
முடைமை என்பனவாம். இவை சிறிது வேறுபட்டுருத்துலணர்க.
30
- 35: விட்டு...........................அடியவர்
(இ-ள்)
அறுகுற்றம் விட்டு . காம முதலிய அறுவகைக் குற்றங்களையும் நீக்கி; அருச்சனை - இறைவழிபாடும்;
வணக்கம் - பணிவுடைமையும்; பிறவுயிர்க்கு அன்பு அகம் - பிற உயிர்களிடத்து அருளுடைய
நெஞ்சமும்; பேரருள் திருநூல்- பெரிய அருளால் தோற்றுவிக்கப்பட்ட மெய்ந்நூலணர்ச்சியும்;
பெருந்துறவு- எவற்றினும் பெரிய துறவுள்ளமும்; எங்கும் நிறைபொருள் அழுந்தல் - அங்கிக்
கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள மெய்ப்பொருளின்கண் அழுந்தாலும்; அருள் இனக்கூட்டம்
- அருளையடைந்த அடியாரொடு கூடுதலும்; இருள் பவம் நடுங்கல்- அறியாமையுடைய பிறப்பிற்கு
அஞ்சுதலும்; எனும் குணம் எட்டும் - ஆகிய இந்த எண்வகைக் குணங்களையும்; தமக்கும் படைக்க
- அடியாராகிய தமக்கும் அளித்தருளுதலாலே; விதி பேற்று அடியவர் - அவற்றை முறைமையாலே
எய்திய பேற்றினையுடைய அடியவர்களுடைய என்க.
(வி-ம்.)
அறவகைக் குற்றம் - அவா, வெகுளி, இவறல், மயக்கம், செருக்கு, அழுக்காறு என்பன, அருச்சனை
- வழிபாடு, வணக்கம் என்றது பணிவுடைமையை, அருள் நூல் - மெய்ந்நூல், பெருந்துறவு - முற்றத்துறக்கும்
துறவு எங்கும் நிறை பொருள் என்றது இறைவனை - அருளினம் - மெய்யடியார் கூட்டம், இருள்-
அறியாமை, பவம் - பிறப்பு எனவே அடியார்க்குரிய என் குணங்கள்
|