|
தோற்றமும் கடந்தது
என்றால் - கொதித்தெழும் தோற்றத்தினையும் விஞ்சிக் கொதித்தெழுமாயின் என்க.
(வி-ம்.)
நின் நிலையைக் கண்ட என்னுளமே வடவைத் தீப்போலக் கொதித்தெழுமாயின் என்றவாறு.
17
- 22: ஆற்றல்.....................................கிழவோன்
(இ-ள்)
ஆற்றல் செய் விண்ணகம் புடைத்து நெடுவரை கரக்கும் - போர் செய்து தேவருலகங்களை அழித்து
நெடிய மலையினுள்ளே மறைந்த; கொடுஞ்சூர் கொன்ற கூரிய நெடுவேல் - கொடிய சூரனைக்கொன்ற
கூர்ந்த நெடிய வேலையுடையவனும்; குன்றக்குறவர் கொம்பினுக்கு இனியன் - மலைவாழ் வேடர்
மகளாகிய வள்ளி நாய்ச்சியாருக்கு இனியவனும்; குருகு ஒலி ஓவாப்பனிமலை வாவி -பறவைகள்
ஆரவரித்தொழியாத இமயமலைக்காரலின் கண்ணதாகிய சரவணப் பொய்கையானது; அழகு வயிறு
வாய்ந்த குழவி அம் கிழவோன் - தன்னிடத்தே அழகாய் ஈன்ற குழந்தையுமாகிய மலைகிழவோன்
என்க.
(வி-ம்.)
ஆற்றல் - போர், விண்ணகம் - தேவருலகம், கரத்தல் - மறைதல், சூர் - சூரபதுமலர்,
குறவர் கொம்பு - வள்ளி, குருகு - பறவைப் பொதுப்பெயர், பனிமலை - இமயமலை, வாவி
- பொய்கை, ஈண்டுச் சரவணப் பொய்கை. கிழவோன் என்றது மலைகிழவோன் என்பதுபட நின்றது.
குழவியங்கிழவோள் என்புழி முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. பனிமலைவாவி
அழகு வயிறு வாய்ந்த குழவியம் கிழவோன் என்னுமிதனை,
மறுவறு கற்பின்
மாதவர் மனிவியர்
நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப் பைஞ்சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
பெரும்பெயர் முருக (பரிபாடல்.கு. செவ்வேள்) |
எனவரும் பரிபாடலினும்
காண்க.
23
- 30: வாழ்...............................தரித்து
(இ-ள்)
வாழ்பரங்குன்று என்னும் மணி அணி பூண்ட நான்மறை புகழும் கூடல் அம் பெருமான் - வாழ்கின்ற
திருப்பரங்குன்றம் என்னும் மணியணிகலனைப் பூண்டுள்ள நான்கு வேதங்களும் புகழாநின்ற
மதுரைப்பெருமான்; வான் முதல் ஈன்ற மலைமகள் தன்னொடும் - வானம் முதலிய ஐம்பெரும்
பூதங்களாலியன்ற உலகங்களையும் அவற்றின்கண் வாழும் உயிரினங்களையும் ஈன்றருளிய தாயாகிய
பார்வதியாருடனே; முழுது உணர் ஞானம் - எல்லாவற்றையும் உணர்கின்ற பேரறிவும்; எல்லாம்
உடைமை - எல்லாப் பொருள்களையும் தன்
|