|
டாடுதல் வழக்கம். இதனைப்
பரிபாடலால் உணர்டக, பொய்யினள் என்றது பரத்தையை, எனவே தலைவனோடு விளையாடி வருகின்ற
பரத்தையைத் தோழி கண்டு எங்குச் சென்று வருகின்றனை என்று வினவினளாக, அதற்கவன்
யான் வையைநீர் விழாவிற்குப் போய் வருகிறேன் என்று பொய் கூறினாள் என்பதும், வையைநீர்
விழவு புகுந்தனம் என ஒரு பொய்யினள் என்பதனாற் பெற்றாம்.
7
- 13: பொலம்..............................நகையை
(இ-ள்)
பொலம் பூண் பெயர்ந்து உறை பூணை - பொன்னணிகள் கலைந்து கிடக்கின்ற ஒப்பனையுடையை;
அருள் தரும் குளிர்ச்சி நீங்கி - அருளுடைமை தருகின்ற தண்ணளி ஒழிந்து; கொடுங்கோல்
வேந்து என - கொடுங்கோல் அரசன்போல்; சேகொள் கண்ணை - சிவப்பைக் கொண்ட கண்களையுடையை;
செம்மொழி பெயர்தந்து - செவ்விய வாய்மைச்சொல் அகன்று; ஒன்றுடன் நில்லா மொழியை
- ஒரு தன்மையுடன் நில்லாத சொற்களையுடையை; மறுத்த முதிர்நாள் செய் முண்டகம் மலர்ந்து
கவிழ்ந்த முகத்தை - மலர்ச்சிக் கிடமில்லாதொழிந்த பருவமில்லாத நாளில் தோன்றிய
தாமரைப் பூப்போல மலர்ந்து கீழே நோக்கிய முகத்தையுடையை; எக்கண் மன்ம் தோன்ற
- எவ்விடமோ நின் மனத்திலே தோன்றா நிற்ப; அரும்பிய நகையை - எம்மை நோக்கிப்
பொய்யே மலர்ந்த நகைப்பினையுடையை என்க.
(வி-ம்.)
நீதானும் கலைந்த அணிகலனுடையை; சிவந்த கண்ணுடையை; தடுமாறும் சொல்லுடையை; எம்மை
நோக்கும் மதுகையின்றிக் கவிழ்ந்த முகத்தினை; நின்மனம் ஒன்று கருத எம்மை நோக்கிப்
பொய்யே நகுகின்றனை! என்றவாறு, பொலம்பூண் - பொன்னாலியன்ற அணிகலன், பெயர்ந்துறைதல்
. தமக்குரிய இடம் விட்டு விலகிக் கிடத்தல். சே . சிவப்பு நிறம், செம்மொழி -
செவ்விய மெய்ம்மொழி, ஒன்றுடன் நில்லா மொழி - தடுமாறுஞ் சொல். நிமிர்ந்து மலர்தற்கு
இடம் மறுக்கப்பட்டமையால் இடுக்கணுடன் மலர்ந்து கவிழ்ந்த தாமரை என்க. அரும்பிய
நகை என்றது பொய்யாக மலர்ந்த நகைப்பு என்பதுபட நின்றது.
13
- 17: அன்றே...............................என்றால்
(இ-ள்)
அன்றே - அல்லவா; இவ்விடை - இவ்விடத்திலே; என்கண் நிக்கேழ் கண்ட என் உளம்
- எனது கண்ணால் நின்னுடைய தன்மையை யுணர்ந்த என் நெஞ்சம்; மன்னி நின்று அடங்கா
- என்பால் நிலைபெற்று நின்று அடங்காமல்; குடுமி அம் பெருந்தழல் பசுங்கடல் வளைந்து
பருக - கொழுந்து விட்டெரிகின்ற வடவைத்தீயானது பசிய கடலை வளைத்துக் கொண்டு அதன்
நீர் முழுதும் பருகுவதற்கு; கொதித்த
|