பக்கம் எண் :

616கல்லாடம்[செய்யுள்87]



35
  முத்தொழி லிற்றன் முதற்றொழி லாக்கி
யொருதாட் டாரைகொண் முக்கவைச் சுடர்வேற்
றலையிருந் தருங்கதி முழுதுநன் றளிக்குந்
40
  திருநகர்க் காசிப் பதியகத் தென்றும்
வெளியுறத் தோன்றிய விருண்மணி மிடந்றோ
னேமியங் குன்றகழ் நெடுவேற் காளையன்
றன்பரங் குன்றத் தமர்பெறு கூடற்
கிறையோன் றிருவடி நிறையுடன் வணங்கும்
    பெரும்புன லூர வெம்மில்ல
மரும்புனல் வையைப் புதுநீ ரன்றே.

(உரை)
கைகோள் : கற்பு. தலைவிகூற்று

துறை : புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல்.

     (இ-ம்.) இதற்கு, “அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின்” (தொல்.கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண்,

“புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்
 ககன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி
 யியன்ற நெஞ்சந் தலைப்பெயத் தருக்கி
 யெதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும்”

எனவரும் விதிகொள்க.

19 - 23: கவைநா......................................காலை

     (இ-ள்) கவைநா கட்செவி - தாருகவனத்து இருடிகளால் விடப்பட்ட பிளவுபட்ட நாவையுடைய பாம்பானது; அணந்து இரை துய்த்த - வாய்திறந்து இரையாகப் பற்றியுண்ட; பாசுடல் பகுவாய பகுவாய் பீழை அம் தவளையும் பச்சை உடலையும் பிறந்த வாயையும் சாதற்றுன்பத்தையும் உடைந்தாகிய தவளையும்; பேழ்வாய் தழல்விழி தரக்கு அடித்து அவிந்த - பெரிய வாயையும் சினத்தீக் காலும் கண்களையுமுடைய புலி தாக்குதலாலே இறந்துபட்ட; நிலம்படர் தோகை குலம்கொள் சேதாவும் - நிலத்திலே தோய்கின்ற வாலையும் உயர்ந்த பிறப்பினையுமூடைய செந்நிறமுடைய ஆவும்; அவ்வுழி அரைமாத்திரை எழு காலை - அங்ஙனம் அவை பட்டவிடத்தே அரை நொடியில் அவை உயிர் பெற்றெழுந்த காலத்தில் என்க.

     (வி-ம்.) கவைநா - இரட்டையாகிய நாக்கு, கட்செவி - பாம்பு; அன்மொழித்தொகை, கண்ணையே செவியாகவும் உடையது என்க.