பக்கம் எண் :

மூலமும் உரையும்617



அணத்தல்- வாய்திறத்தல், துய்த்தல் - உண்ணுதல், பாசுடல்-பச்சை உடம்பு, பகுவாய் -பிளந்த வாய். பீழை - துன்பம். ஈண்டு சாத்துன்பம். தரக்கு - புலி, குலம்- மேன்மை, அவிதல் - இறத்தல், தோகை - வால், சேதா - செந்நீறப்பசு, இது பசுக்களுள் சிறந்தது என்பர். அவ்வுழி அரைமாத்திரை எழுகாலை என்றதனால் அவற்றை இறைவன் அரை நொடியில் உயிர்ப்பித்தனர் என்பதும் பெற்றாம்.

24 - 28: திருநுதல்............................உடுப்ப

     திருநுதல் கண்ணும் மலைமகள் பக்கமும் எரிமழு நவ்வியும் பெறும் அருள் திருஉரு எடுத்து - அழகிய நெற்றிக்கண்ணும் மலைமகள் வீற்றிருந்த பாகமும் எரிகின்ற மழுவும் மானும் உடைய திருவருட்பிழம்பாகிய திருவுருவம் எடுத்தருளி; உடன் அந்த கடுக்கொலை அரவினை தீவாய்ப் புலியினை - அப்பொழுதே மேற்கூறிய நஞ்சாற் கொல்லும் இயல்புடைய அப்பாம்மையும் தீக்காலும் வாயையுடைய அப் புலியையும்; திருத்தவர் நகைப்ப - தாருகவனத்திருடிகள் நகைக்கும்படி; எடுத்து அணி பூண உரித்து உடை உடுப்ப - முறையே அப்பாம்மை எடுத்து அணிகலனாக அணிந்து கொள்ளவும் அப்புலியின் தோலை உரித்து உடையாக உடுத்திக்கொள்ளவும் என்க.

     (வி-ம்.) நுதற்கண் - நெற்றிக்கண், மலைமகள் - பார்வதி, எரி மழு: வினைத்தொகை, நவ்வி - மான், இறைவன் மேற்கொள்ளும் உருவமெல்லாம் திருவருள் பிழம்பேயாகலின் அருள் திருஉருவெடுத்து என்றார்

“மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யானும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே” (சித்தி - 61)

எனவும்,

“குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆத் லானும்
 நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
 வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யானும்
 நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே” (சித்தி - 65)

எனவும் வரும் சித்தியாரானும் உணர்க. கடுக்கொலை - நஞ்சினாற் செய்யுங்கொலை, திருத்தவர் - தாருகவனத்திருடிகள், பாம்மை எடுத்து அணிபூணவும் புிலித்தோலை உரித்து உடை உடுப்பவும் என உம்மை விரித்தோதுக.

29 - 36 : முனிவரும்.................................பதியகத்து

     (இ-ள்) முனிவரும் தேவரும் கரமலர் முகிழ்ப்பத் தருவன அன்றி- அதுகண்ட முனிவர்களும் தேவர்களும் மலர்