பக்கம் எண் :

618கல்லாடம்[செய்யுள்87]



போன்ற தம் கைகளைக் குவித்து வனங்காநிற்பவும் அருள் செய்வனவாகிய இவை அல்லாமலும்; மலரவனவன் தொழில் ந்ரனன் ஆங்கு அவன் கூறுடைக் காவல் சேரத்துடைக்கும் பேரருள் நாளில்-பிரமனத் படைப்புன் அங்ஙனமே திருமாலினது பெருமையுடைய காப்பும் ஒருங்கே அழிகின்ற பேரருளையுடைய ஊழிக்காலத்தும்; முத்தொழிலில் தன் தொழில் ஆக்கி-படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூவகைத் தொழிலுள்ளும் இறுதியில் நின்ற அழித்தல் என்னும் தந்தொழிலை முதன்மையுடையதாக்கி; ஒருதாள் தாரைகொள் முச்சுடர் கவைவேல்தலை இருந்து-ஒரு தண்டின்மேல் கூர்மை கொண்ட மூன்றாகிய ஒளிவிசும் கவைகளையுடைய சூலத்தின் உச்சியில் தங்கி; அருங்கதி முழுதும் நன்று அளிக்கும் திருநகர் காசிப்பதியகத்து-அரிய கதியனைத்தும் குறைவின்றி வழங்காநின்ற அழகிய நகரமாகிய காசி என்னும் திருப்பதியில் என்க.

     (வி-ம்.) மலரவனவன் என்புழி இறுதியில் நின்ற அவன் பகுதிப் பொருலது. மலரவன் தொழில் என்றது படைப்பினை. நாரணனவன் என்புழியும் அவன் பகுதிப்பொருட்டு. கூர்-ஈண்டுப் பெருமை மேற்று. அழித்தலும் அருட்செயலேயாதலால் துடைக்கும் பேரருள் நாள் என்றார். இதனை,

“அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம்
 கழித்திடல் நுஅரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில்
 தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்திதானும்
 பழிப்பொழி பந்தம் விடு பார்த்திடின் அருளே எல்லாம்” (சித்தி - 57)

எனவரும் சித்தியாரானும் உணர்க.

36 - 41: என்றும்............................புனலூர

     (இ-ள்) என்றும் வெளியுற தோன்றிய-எந்த நாளினும் வெளிப்படத் தோன்றாநின்ற; இருள் மணிமிடற்றோன்-நீலமணி போலும் நிறமுடைய மிடற்றையுடையவனும்; நேமி அம்குன்று அகழ் நெடுவேற் காளையன்தன்-வட்டமான குருகுப் பெயர்க் குன்றத்தைப் பிளந்த நெடிய வேலையுடைய முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள; பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு இறையோன்-திருப்பரங்குன்றத்தைத் தன் இனமாகப்பெற்றுள்ள மதுரைய்ன்கன் எழுந்தருளி யுள்ளவனுமாகிய சிவபெருமானுடைய; திருவடி நிறையுடன் வனங்கும் பெருமபுனல் ஊர-அழகிய அடிகளை அன்புடனே வனங்குகின்ற மிக்க நீரையுடைய ஊரையுடையோய் என்க.

     (வி-ம்.) நேமி-வட்டம்; மூங்கிலுமாம். குன்று-கிரவுஞ்சமலை. காளையன்-என்றும் இளையோன். தமர்-தன்னினம். நிறை-ஈண்டு அன்பு. ஊரன்-தலைவன்.