|
1 - 7: மாயமும்...........................................உய்த்து
(இ-ள்)
நகைத்தொகை கூட்டி-நகைப்பினை மிகுதியும் சேர்த்து; கவைத்து எழுசொல்லில் மாயமும்
இன்பமும் மருட்சியும் தெருட்சியும்-இருவேறாகிய சொல்லினிடத்தே வஞ்சகமும் இன்பமும்
மயக்கமும் தெளிவும்; விழியில் அமுதமும் கடுவும் வைத்து அளிக்கும்-கண்ணினிடத்தே அமுதமும்
நஞ்சமும் வைத்து வழங்குகின்ற; இருமனம் பொய்உளத்து ஒருமகள் தன்னை-இருவகைப்பட்ட மனத்தையும்
பொய்யாய உள்ளத்தையுமுடைய கீழ்மக்களாகிய பரத்தை ஒருத்தியை; கரியோன் கடுப்பத்
துயில் கவர்ந்து-கண்ணனைப்போல் ஆடையைக் கவர்ந்தும்; ஒளிர-அவள்தம் மேனி ஒளிருங்கால்;
விதியினும் பன்மைசெய் முகம்படைத்து-நான்முகனையுங்காட்டில் பலவாகிய முகத்தைப் பெற்று;
அளவாச் ச்தியின் படைகன் செல உய்த்து-அளவுபடாத ஒளியுடைமையாலே கூர்த்த வேலையொத்த
நின்கண்கள் பதியும்படி கூர்ந்து நோக்கியும் என்க.
(வி-ம்.)
தொகை-ஈண்டு மிகுதி குறித்து நினது. கவைத்தெழு சொல்-உள்ளொன்று வைத்துப் புறத்தொன்றாக
எழும் கவர்பட்ட சொல். மாயம்-வஞ்சகம். மருட்சி-மயக்கம். த்ருட்சி-தெளிவு. அமுதம்-அமிழ்தத்தன்மை.
இருமனம்-ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒருகாலத்தேயுடைய மனம். இருமனப்பொய்யுள்ளத்து
ஒருமகள் என்றதனால் கீழ் மகளாகிய பரத்தை ஒருத்தி என்றாம்.
இருமனப்
பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு |
(குறள். 920) |
எனவரும் திருக்குறளும்
நினைக. கரியோன்-கண்ணன். கடுப்ப: உவமவுருபு. கண்ணன் யமுனையாற்றில் ஆய்ச்சியர்
நீராடுங்கால் அவர் துகிலைக் கவர்ந்தான் என்பது கதை; அதுபோல நீயும் நின் பரத்தை
நீராடுங்கால் அவள் துகிலை உரிந்து விளையாடி என்பது தலைவியின் கருத்து. ஒளிர என்றது
துகில் உரியப்பட்டமையால் ஒளிருகின்ற என்பதுபட நின்றது. விதி-நான்முகன். விதியினும்
பன்மை செய் முகம்படைத்து என்றது நாற்றிசையினும் முகம்படைத்து நோக்குகின்ற பிரமனைக்
காட்டிலும் மிகுதியாக நீ அப்பரத்தையின் மேனியை நான்கு பக்கங்களினும் நோக்குதலேயன்றி
மேலும் கீழும் நோக்கினை என்றவாறு. படைக்கண் என்றது கூர்த்த கண் என்பதுபட நின்றது.
செல் உய்த்தல்-பதியும்படி நோக்குதல்.
7
- 14: அரும்பு...............ஊற்றி
(இ-ள்)
முண்டகஅரும்பு செய் முலையின் சாந்து அழித்து-தாமரைமொட்டுப் போல அழகுசெய்கின்ற அவள்
முலையின்மேற் பூசப்பட்ட சந்தனத்தை அழித்தும்; அமைதோள் கழை கரும்பு எறிந்தும்-அவளுடைய
மூங்கில்போன்ற தோளின்
|