|
(வி-ம்.)
எம்மில்லம் என்றது எளிய எம்மில்லம் என்பதுபட நின்றது. வையைபுதுநீர்-வையையாறுபோலப்
புதுத்தன்மையுடையது. நீர்-தன்மை.
இதனை,
கூடற்கிறையோன் றிருவடி நிறையுடன் வனங்கும் பெரும்புனலூர! இருமனப் பொய்யுள்ளத்து ஒருமகடன்னைத்
துகில் கவர்ந்து படைக்கண் செலவுய்த்தும் முலையிற் சாந்தழித்துத் தோளெழுதிய கழைக்கரும்
பெறிந்தும் கோதைவகை பரிந்துத் திரையெதிர் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்து உடலூற்றி
அலர் சூட்டிப் புதுத்தேனீத்துடன் புணரும் வையையின் மறித்துவங் கெழுமிய விழவுள் நீயே
அன்னவடன்னுடன் புகுமதி எம்மில்லம் அரும்புனல் அவ்வையைப் புதுநீரன்றென வினை முடிவு செய்க.
மெய்ப்பாடும் பயனும் அவை.
|