|
35
|
|
வானக
வாவி யூடுற மலர
வொருதா ளெழுபுவி யொருவத் திண்டோள்
பத்துத் திசையு ளெட்டவை யுடைப்ப |
| |
|
வொருநடங்
குலவிய திருவடி யுரவோன்
கூடலம் பதியகம் பரவி
நீடநின் றெண்ணா ருளமென நீயே. |
(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று.
துறை: வருத்தந்தணித்தல்.
(இ-ம்.)
இதனை பெரற்கரும் பெரும் பொருள் (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் பிற
என்பதன்கண் அமைத்துக் கொள்க.
1
- 5: வேலி..................................நெஞ்சம்
(இ-ள்)
வேலி அம் குறுஞ்சூல் விளைகாய் பஞ்சு இனம்-வேலிப்பருத்தியினது குறிய பிஞ்சு முதிர்ந்த
காய் வெடித்துழி அதனுள் அடங்கிய பஞ்சுக்கூட்டங்கள்; பெரு வெள்ளிடையில் சிறுகால்
பட்டென-பெரிய வெளியிடத்தே மெல்லிய தென்றற் காற்றில் அகப்பட்டாற் போல; நிறை
நாண் வேலி நீங்கி-என்னுடைய நிறையும் நாணமுமாகிய பாதுகாவல் பறந்தொழியா நிற்ப;
தமியே ஒருவழி நில்லாது அலமரல் கொள்ளும் என் அருந்துணை நெஞ்சம்-தனித்து ஒரு நிலையில்
நில்லாமல் சுழலா நின்ற எனது பெரிய துணையாகிய நெஞ்சமானது என்க.
(வி-ம்.)
வேலி-வேலிப்பருத்தி என்னும் ஒருவகைக் கொடி. இதன் காய் முதிர்ந்து வெடிக்குங்காலதனகத்துள்
பஞ்சுகள் சிறு சிறு விதைகளுடன் காற்றிற் பறந்து செல்லும் இயல்புடையது. அதனை ஈண்டுத்
தன்னை விட்டு ஒழிந்து போன நிறைக்கும் நாணுக்கும் உவமையாக்கினாள் என்க. சிறுகால்
என்றது தென்றற்காற்றினை. சிறுமை-ஈண்டு மென்மை முறித்து நின்றது. இதனை வடநூலார் மந்த
மாருதம் என்ப. நிறை-மனம் புலன்களிற் செல்லாமல் தடுக்கும் ஆற்றல். நாண்-பெண்மைக்
குணங்களில் ஒன்று. நிறை நாண் என்பவற்றில் ஈற்றில் எண்ணும்மைகள் தொக்கன. அலமரல்-சுழலுதல்.
நீக்கி: எச்சத்திரிபு.
5
- 10: நிற்குறும்............................................சிறுபனும்
(இ-ள்)
நிற்கு உறும் பயன்-உன்பால் பொருந்தத்தக்க பயனை; நீ கேண்மதி-நீ கேட்பாயாக; மண்
உளர் வணங்கும் தன்னுடைத்தகைமையும்-மண்ணுலகத்தில் வாழும் மாந்
|