|
தர்கள் வனங்கத்தகுந்த
தனது பெருமையும்; இருள் அறு புலனும்-மாசற்ற அறிவுடைமையும்; மெய்ப்பொருள் உறும் கல்வியும்-உண்மைப்
பொருளை எய்துதற்கேற்ற மெய்க் கல்வியும்; அமரர் பெற்று உண்ணும் அமுது உருக்கொண்டு-தேவர்கள்
பெற்று உண்ணாநின்ற அமிழ்தத்தின் சுவையுடைத்தாய்; குறுஞ்சொல் குடட்டிய மழலை மெல்
கிளவியில்-இளஞ்சொல்லாகிய குழறிய மென்மையாகிய வேட்கையை விளைக்கின்ற; தளர்
நடைச் சிறுவனும்-தளர்ந்த நடையையுடைய மைந்தனும் என்க.
(வி-ம்.)
நிற்கு-நினக்கு. மதி: முன்னிலையசை. தகைமை-பெருந்தன்மை. இருள்-அறியாமை. மெய்ப்
பொருள்-இறைப்பொருல். குறுஞ்சொல்-இளஞ்சொல். மழலை-எழுத்துருவம் பெறாத மென்சொல்.
விளரி-வேட்கைப் பெருக்கம் (சூ. நிக. கக. ளகரவெ. 15)
11
- 14: நின்னிலம்..................தவிர்மோ
(இ-ள்)
புகழ்ந்து நின் நலம் உணும்-புகழ்ந்து பேசி நினது இன்பத்தை நுகர்ந்த; நீதியும் தோற்றமும்
மாண்பும் துவரத் தீர்த்த-மெய்ம்மையும் மாண்பும் முற்றும் துறந்த; நம் கவர் மனத்து
ஊரன்-நம்முடைய இரண்டுபட்ட நெஞ்சத்தையுடைய தலைவன்; பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும்
கொல் என-நமது பருத்த அழகிய ஒளியுடைய முலைகளைத் தழுவுவனோ வென்று; நீ சென்று சென்று
இரங்கலை-நீ அடிக்கடி வருந்தாதே கொள்; அன்றியுந் தவிர்ம்-அவன் பிரிந்து போவதன்றியும்
பிரியாது தங்குவன்காண் என்க.
(வி-ம்.)
பொம்மல்-பருமை. கொல்: ஐயத்தின்கண் வந்தது. அன்றியும்-பிரிதலன்றியும், தவிர்ம்-தவிர்வன்.
15
- 21: நெட்டுகிர்....................உறுத்த
(இ-ள்)
நெடு உகிர் கருங்கால் தொல்முலை பெரும்பேய்-நெடிய நகத்தினையும் கரிய காலையும் தோலாகித்
தூங்கும் முலையினையும் உடைய பெரிய பேய்கள்; அமர் பெற்று ஒன்னலர் அறிவுறப்படர-போர்க்களம்
கிடைக்கப்பெற்றுப் பகைவர் அறியும்படி செல்லா நிற்பவும்; பேழ்வாய் இடாகினி தொழுது
ஏத்தி-பெரிய வாயையுடைய இடாகினிப்பேய் திருவடிகளை வனங்கி வாழ்த்தி; கையடை கொடுத்த
வெள் நிணம் வாய்குழவி-அடைக்கலமாகக் கொடுத்த வெள்ளிய நிணத்தை கவ்விய வாயையுடைய
குழந்தை; ஈமம் பெருவிளக்கு எடுப்ப-நன் காடானது பெரிய விளக்கை ஏந்தா நிற்ப; அதன்
கடு பொடி கல்.-40
|