|
காப்பு உடல் துளங்க-அச்சுடுகாட்டின்கண்
பிணஞ்சுடுதலால் உண்டாகும் சாம்பல் சூழ்டலால் உடல் வருந்தவும்; சுரிக்குரல் ஆந்தையும்
கூகையும் அணி தால் உறுத்த-அப்பேய்க்குழந்தைக்குச் சுரிந்த குரலையுடைய ஆந்தையும் கோட்டானும்
அழகாகத் தாலாட்டவும் என்க.
(வி-ம்.)
உகிர்-நகம். தோல் முலை-தோலாகித் தூங்கும் முலை. போர்-போர்க்களம். இடாகினி-பேய்களுள்
வைத்து அடிமையாகிய பெண் பேய். ஒன்னலர்-பகைவர். குழவி என்றது பேயின் குழந்தையை.
ஈமம்: ஆகுபெயர். கூகை-கோட்டான.் தாலுறுத்தல்-தாலாட்டுதல்.
22
- 26: ஓரி...........................கானிடை
(இ-ள்)
ஓரி பாட்டு எடுப்ப-முது நரிகல் ஊளையிடவும்; உவணம் கொடியும் செஞ்செவி கவர்வாய் சேவல்
கழுகும்-பருந்தும் காக்கையும் சிவந்த செவியையும் பிளவாகிய வாயையுமுடைய சேவலோடே கூட்ய
பென் கழுகுகளும்; இட்டசெம்பந்தர் இடை இடை கால் என-பறத்டலாலே இமைத்த செவ்விய
பந்தருக்கு நடுவே நடுவே நடப்பட்ட கால்களைப்போல; பட்டு உலர் கள்ளியம்பால் துயில்
கொள்ளும்-பட்டுப்போய் உலர்ந்துள்ள கள்ளியினிடத்துத் துயில் கொள்ளும்; சுள்ளிய
அம்கானிடை-இலையுதிர்ந்த சுள்ளிகள் பொருந்திய பாலை நிலத்தின்கண் என்க.
(வி-ம்.)
போர்க்களம் கிடைத்தமையால் இடாகினிப் பேய் காளியை வாழ்த்தி அடைக்கலமாகக்
கொடுத்துப் போன பேய்க்குழந்தை ஆந்தையும் கூகையும் தாலாட்டவும் முதுநரி பாடவும் பருந்து
முதலியன இட்ட பந்தலின்கீழ் அதன் கால்கல் போலத் தோன்றும் கள்ளியினிடத்தே உறங்கும்
என்றவாறு. ஓரி-கிழநரி. உவணம்-பருந்து. கொடி-காக்கை. சேவலும் கழுகும் என்றதனால்
சேவற்கழுகும் பெண்கழுகும் என்க. பருந்து முதலியன நெருங்கிப் பறத்தலால் பந்தர்பொலத்
தோன்றுதலின் அவையிட்ட பந்தர் என்றார். சுள்ளி-இலையுதிர்ந்து வற்றிய மரக்கொம்பு.
26
- 32: சுரர்........................களிப்ப
(இ-ள்)
சுரர் தொழுது ஏத்த-தேவர்கள் வாங்கி வாழ்த்தாநிற்பவும்; மரகதத் துழாயும் அந்நிறக்
கிளியும் தோகையும் ச்லமும்-மரகதமணி போன்ற நிறமுடைய துளப மலையையும் அப்பச்சைநிறக்
கிளியையும் மயிலிஅகுகளையும் சூலப்படையையும் முறையே; தோளில் முன்கையில் மருங்கில்
கரத்தினில் வாடாது இருத்தி-தோளினிடத்தும் முன்கையிலும் இடையிலும் கையிலும் நீங்காமலிருத்தி;
போர்வலி அவுணர் புக-போராற்றுதலில் வலிமைமிக்க அரக்கர்கள் எதிர்ந்த
|