|
போது; பொருது உடற்றிய-போர்
செய்து அழித்த; முக்கண் பிறை எயிறு எண் தோள் செல்வி-மூன்று கண்களையும் பிறை போன்றுவளைந்த
பற்கலையும் எட்டுத்தோள்களையுமுடைய செல்வியாகிய காளியம்மை; கண்டு உளம் களிப்ப-நோக்கி
நெஞ்சம் மகிழும்படி என்க.
(வி-ம்.)
சுரர்-தேவர். மரகதம்-ஒருவகை மணி. இது துழாய்க்கும் கிளிக்கும் நிறம்பற்றி வண்ட
உவமை. அந் நிறம்-அப் பச்சை நிறம். துழாயைத் தோளிலும் கிளியை முன்கையிலும் தோகையை
மருங்கிலும் சூலத்தைக் கையிலும் இருத்தி என்றவாறு. இது முறை நிரனிறை. அவுணர்-அரக்கர்.
செல்வி-காளி.
32
- 35: கனை..............................உடைப்ப
(இ-ள்)
கனைகழல் தாமரை வானகம் வாவியூடு உறமலர-தனது மறைச்சிலம்பொலிக்கின்ற திருவடியாகிய
ஒரு தாமரைப் பூ வானத்திலுள்ள கங்கையினிடத்தே பொருந்தி மலரா நிற்பவும்; ஒரு தாள்
எழுபுவி ஒருவ-ஒரு திருவடியானது கீழேழுலகங்கலையும் கடந்து அப்பாற் செல்லவும்; திண்தோள்
பத்துத்திசையுள்-திண்ணிய தோள்கள் பத்துத்திசைகளுள் வைத்து; எட்டவை உடைப்ப-எட்டுத்திசைகளையும்
ஊடுருவிச் செல்லா நிற்பவும் என்க.
(வி-ம்.)
கனைகழல்; வினைத்தொகை. தாமரை: ஆகுபெயர். வாவி-கங்கை. எழுபுவி-கீழேழுலகங்கள்.
பத்துத்திசை-கிழக்குத்திசை முதலிய எட்டும் மேலும் கீழும் என்க. எட்டவை-எட்டாகிய
அவை. அவை-அத்திசைகள். உடைத்தல்-ஊடுருவிப்போதல்.
36
- 38: ஒருநடம்......................உளமென
(இ-ள்)
ஒருநடம் குலாவிய-ஒப்பில்லாத இன்பக் கூத்தாடியருளிய; திருவடி உரவோன்-திருவடியையுடைய
வாலறிவனுடைய; கூடலம் பதியகம் பரவி-நான்மாடக் கூடலாகிய மதுரையைப் போற்றி; நீடு
நின்று எண்ணார் உளம் என-ஒழியாமல் நிலைபெற்று நினையாத மடவொருடைய நெஞ்சத்தைப்போல
என்க.
(வி-ம்.)
ஒருநடம்-ஒப்பில்லாத கூத்து. உரவோன்-அறிஞன்: ஆற்றலுடையோன் எனினுமாம் திருவடி உரவோன்
கூடலம் பதியகம் எண்ணார் உளம் இரங்குதல் போல இரங்கலை என இயையும். இதனை, திருவடி
உரவோன் கூடல் பரவி யெண்ணாருளமென நீயே நெஞ்சிற் குறும்பயன் கேள். கவர்மனத்தூரன்
கதிர் முலை புணருங் கொல்லென இரங்கலை. அன்றியுந் தவிர்வன் என வினை முடிவு செய்க.
மெய்ப்பாடும் பயனும் அவை.
|