|
(இ-ள்)
குவளை பூத்த வடிகண்-குவளைமலர்போல மலர்ந்த கூர்மையான கண்களையும்; தவள வாள் நகை-வெள்ளிய
ஒளிபொருந்திய பற்களையும்; குறுந்தொடி மடந்தை நம் டோழி (உம்) கேண்மோ-குறிய தொடியையுமுடைய
மடப்பத்டையுடைய எந் தொழியே கேட்பாயாக; ஊர் நகைத்து உட்க-ஊறாற் பழித்து அஞ்ச;
ஊக்கும் ஓர் விருந்தினை-நெஞ்சத்தைக் கிளர்ச்சிசெய்யும் ஒரு புதுமைச் செய்தியை;
கைர் அலர் பூத்த-முருக்கு மலர்ந்தாலொத்த; வொல் செஞ் செம்மை குடுமி-ஒளியோடு மிகவும்
சிவண்ட சூட்டையுடைய; மஞ்சுஅடை கிளைத்த-இளமை நீங்காத; வரிகுறு முள் தாள் கூர் அரிவாளின்-
வரிபொருந்திய சிறுமுள்ளோடு கூடிய காலாகிய கூரிய அரிவாளையும் என்க.
(வி-ம்.)
குவளை: ஆகுபெயர். வடி-மாவடுவுமாம். நகை-பல். தொடி-வளையல். கேண்மோ என்புழி, மோ:
முன்னிலையசை. தோழி ஓர் விருந்தினைக் கேண்மதி என இயையும். விருந்து-புதுமை; அஃதாவது
புதுமையான செய்தி. தோழியும் என்புழி, உம்: இசைநிறை. ஊர்: ஆகுபெயர். உட்குதல்-அஞ்சுதல்.
கவிர்-முருக்க மரம். சுட்டு-உச்சிக்கொண்டை.
6
- 9: தோகை............................கொடிக்கு
(இ-ள்)
தோகை அம்சேவல் கொடியோன்-தோகையையுமுடைய அழகிய கோழியையுடைய உயர்த்திய முருகக்
கடவுளினது; குன்றம் புடைவளர் கூடல்-திருப்பரங்குன்றம் ஒருபால் வளர்ந்துள்ள மதுரையின்கண்;
கணிச்சி அம் தைத்தலத்து-மழுப்படையை அழகிய கையினிடத்தேந்திய; அருட் பெரும் காரணன்-அருளையுடைய
பெரிய காரணனாகிய இறைவன்; உலகு உயிர் மகவு உடைப் பசுங்கொடிக்கு-உலகிலுள்ள அனைத்துயிருமாகிய
மக்களையுடைய பசிய பூங்கொடியை யொத்த உமாதேவிக்கு என்க. 9வி-ம்.) சேவற் கொடியோன்-முருகன்.
குன்றம்-திருப்பரங்குன்றம். கணிச்சி-மழுப்படை. காரணன்-நிமிர்த்த காரணள்; என்றது
இறைவனை. பசுங்கொடி: அன்மொழித்தொகை.
9
- 14: ஒருபால்.....................யாமே
(இ-ள்)
ஒருபால் பகுத்து-தன்மெய்யில் ஒருபாகத்தைப் பகுத்துக்கொடுத்து; உயிர்க்கு-முன்கூறப்பட்ட
உயிராகிய மக்களுக்கு; இன்பம் தொகுத்த மெய்த் துறவினன்-இன்ப வாழ்க்கையைக் கூட்டிவைத்த
உண்மைத் துரவியினுடைய; முளைரி நீர் புகுத்திய-தாமரை மலர் வெல்கி நீரிற் புகும்படி
|