|
செய்த; பதமலர் தாள்
துணை-அன்பர் பெறும் பதமாகிய இரண்டு திருவடிமலரையும்; மணிமுடி சுமந்த நம் வயல் அணி
ஊரர்பின்-அழகிய முடிமேற்கொண்ட நம்முடைய கழனிகள் நிரம்பிய ஊரையுடைய தலைவருடனே;
வளர் மறித்தகர் என-அவரால் வளர்க்கப்பட்ட ஆட்டுக்கிடாய் போல; திரிதரும் பாண்மகன்
எனக்குறித்து-திருயாநின்ற பாணன் என நீ கூறுவாய்; யாம் அறிகிலம்-யாம் அவனை அங்ஙனம்
அறிகின்றிலேம் என்க.
(வி-ம்.)
பால்-பகுதி. உயிர்-ஈண்டு மக்களுயிரைக் குறித்து நின்றது. இறைவன் தனக்குள்ளேயே ஆணும்
பெண்ணும் என இரு தன்மைகளை யுண்டாக்கிக்கொண்டு பெண்ணாகிய உமாதேவிக்குத் தனது இடப்பாகத்தை
யளித்து உயிரினங்களும் தம்முள் ஆணும் பெண்ணும் ஆகிக் காதலுற்று இன்புற்று வாழவேண்டும்
என்னும் கருத்தால் ஆதலின் பசுங்கொடிக்கு ஒருபால் பகுத்து உயிர்க்கு இன்பம் தொகுத்த
எனப் பசுங்கொடிக்குப் பாகம் பகுத்தமையை ஏதுவாக்கினார். இதனை,
படைப்பாதித்
தொழிலும் பத்தர்க் கருளும்பா வனையும் நூலும்
இடைப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும்
அடைப்பானாம் அதுவும் முத்தியளித்திடு மியோகும் பாசந்
துடைப்பானாந் தொழிலும் தொடக்கானேற் சொல்லொணாதே (சித்தி. 74)
|
என்னும் சித்தியாரானுன்
உமர்க. வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதுபற்றி இறைவனை மெய்த்துறவினன் என்றார்.
தாமரை மலர்கள் திருவடியின் அழகினை யாம் ஒவ்வோம் என நாணி நீர் புக்கன என்பது
கருத்து; மறித்தகர்-ஆட்டுக்கிடாய். திரிதரும்: ஒருசொல். பாண்மகன்: ஒருசிஒல் பாணன்
என்க.
14
- 19: எமது..........................தந்தும்
(இ-ள்)
எமது மணி முன்றில்-எம்முடைய மண்பிகள் விளங்குகின்ற முற்றத்தில்; அன்ன ஊரர்-அத்தலைவருடைய;
புல்லமும் விழுக்குடிக்கு அடாக் கிளவியும்-புன்மையும் அவரது உயர்குடிப் பிறப்பிற்குத்
தகுதியில்லாத சொல்லும், படா அப் பழியும்-இல்லாத வசையுமாகிய; தனது புல் மொழி-தனது
புன்சொற்களை; முன் எங்கையர் புலவியில்-முன்னர் எந்தங்கையராகிய பரத்தையர் ஊடற்பொழுதின்கண்;
இயம்பின-சொல்லிப் பழகியவற்றையே; நம்பால் நீளத் தந்தும்-னம்மிடத்தேயும் மிகுதியாகச்
சொல்லியும் என்க.
(வி-ம்.)
அன்ன ஊரர் என்றது தலைவனுடைய அயன்மை தோன்ற நின்றது. புல்லம்-புன்மை. விழுக்குடி-உயர்குடி.
அடாக் கிளவி-பொருந்தாச் சொல். படாப்பழி-பொய்ப்பழி. நீளத்தருதல். நெடும்பொழுது
பேசுதல். இப்பானன் நந்தலைவருடன் பரத்தையர்
|