பக்கம் எண் :

632கல்லாடம்[செய்யுள்89]



ஊடாடியபொழுது அவர் ஊடல் தீர்க்கும் பொருட்டுப் பேசிய புல்லிய பொய்ம்மொழிகளையே நம்பால் வந்து நீளமொழிகின்றான் என்றவாறு.

20 - 21: ஒன்று....................உறுத்தின்

     (இ-ள்) ஒன்று பத்து ஆயிரம் நன்று பெற-ஒன்றையே பத்தாகவும் ஆயிரமாகவும் பெருக்கி நாம் நம்பும்படி; புனைந்தும் கட்டிய பொய்ப்பரப்பு அனைத்தும்-சிறப்பித்து அவனால் கட்டிப் பேசப்பட்ட பொய்யினது விரிவு முழுதும் யாம் (ஓருவமை வாயிலாய்); நிற்கு உறுத்தின்-உனக்குச் சொல்லப்புகுந்தால் என்க.

     (வி-ம்.) ஒன்றைப் பத்தும் நூறும் ஆயிரமுமாகப் பெருக்கி என்க. நூறு இனம்பற்றிக்கொள்க. கட்டுதல்-கற்பித்துப் பேசுடல். உறுத்துதல்-சொல்லி அறிவுறுத்துதல் என்க. உவமைவாயிலாய் என மேலே உவமை கூறுதலால் வருவித்தோதுக.

22 - 25: பேர்...................பெறும்

     (இ-ள்) பேர் அறுழ் சகரர்-பேராற்றலுடைய சகரர்கள்; ஏழ் எனப் பறித்த முதிர்திரை அடிக்கும் பரிதி அம் தோழம்-ஏழு என்று எண் கூறும்படி அகழ்ந்த பெரிய அலைவிசுகின்ற ஞாயிறு தோன்றுதற்கிடனான கடலிடத்தையெல்லாம்; காட்டையுள் இம்பர்காண்-ஒருசில நொட்சியில் இங்குக் காணுமாறு; தோட்டி நின்று அளிக்கும் தொன்மை உண்டு எனில் அது பெறும்-பெயர்த்து எடுத்துக் காட்டுகின்ற பழங்கதை ஒன்று உண்டெனில் அதனை ஒக்கும் என்க.

     (வி-ம்.) எறுழ்-வலிமை. பறித்டல், அகழ்தல் என்பன தோண்டுதற் பொருள். திரை, அலை என்பன ஆகுபெயர்கள். தோழம்-இடம். காட்டை-பதினைந்து நிமிடம் கொண்ட காலத்தின் அளவு. தோட்டல்-பேர்த்தல். சகரர்கள்-சகரச் சக்கரவர்த்தியின் புதல்வர்கள். இவர்கள் தொகை அறுபதினாயிரம். பெருமை-இங்கு அடங்காமைப் பொருட்டு. இம்பர்: ஆகுபெயர். அளித்தல்-இங்குக் காட்டலெனப் பொருள்பட்டு நின்றது. இதனை, நந்தோழி ஒருவிருந்து கேண்மோ, தோகையஞ் சேவற் கொடியோன் குன்றம் புடைவளர் கூடல் மெய்த்துறவினன் முளரிநீர் புகுத்திய படமலர்த் தாட்டுணை மணிமுடி சுமந்த நம் வயலணி யூரர் பின் தகரெனத் திரிதரும் பாண்மகன், எமது முன்றி லொருபுடை நின்று அன்னவூரர்புல்லமும் அடாஅக் கிளவியும் படாப்பழியும் எங்கையர் புலவிய லியம்பின, நம்பால் நீளத்தந்தும் நன்றுபெறப் புனைந்தும் கட்டிய அனைத்தும் நிற்குறுத்தின் சகரர் பறித்த பரிதியந் தோழங் காட்டைய்ள் இம்பர் கானத் தோட்டிநின் றளிக்குந் தொன்மையது பெறுமென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.