பக்கம் எண் :

640கல்லாடம்[செய்யுள்91]



ஒளியுள்ள மணிகளைக் கொழிக்கின்ற செவ்வேள் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்தைத் தன் பாற் கொண்டுள்ள; திருப்பெறு கூடல்-தெய்வத்தன்மை பெற்ற மதுரையின்கண் எழுந்தருளியுள்ள; கொழுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கன்-கொழுவிய தீயானது கொழுந்து விட்டாற்போன்ற நெடிய சடையையுடைய சிவபெருமானது; பவளம் தழைத்த பதமலர் சுமந்த-பவளநிறமுள்ள திருவடிமலர்களைத் தலைமேற் கொண்ட; நம் பொருபுனல் ஊரனை-நம்முடைய கரையை மோதுகின்ற நீரையுடைய ஊரையுடைய தலைவனை; பொது என அமைத்த- யாவர்க்கும் பொதுவாக அமைக்கப்பட்ட; கடி குடி அ மனையவர் மனைபுகுத்தி-சான்றோரால் விலக்கப்பட்ட குடிவாழ்க்கையையுடைய அப்பரத்தை மகளிருடைய வீட்டிலே சேர்த்துப் பின்னர்; அறுவாய் நிறைந்த மதிப்புறத்தோ என சுரைதலை கிடைத்த-அரியப்பட்ட தன்னுடைய ஒரு நுனி முழுத் திங்களிடத்து அமைந்துள்ளதோ என்று கருதும்படி சுரைக்குடுவையைத் தலையிலே தாங்கப்பெற்ற; இசையுளர் தண்டு எடுத்து-இசை நரம்புகளைத் தடவுகின்ற யாழைக் கையிலெடுத்து என்க.

     (வி-ம்.) உடைதிரை: வினைத்தொகை. சேயோன்-முருகப்பெருமான். குன்று-திருப்பரங்குன்றம். சுடர்-தீ. சுடர் கிளைத்தாற் போன்ற சடை என்க. பொருபுனல்-கரையை மோதுகின்ற நீர். ஊரன்-தலைவங் கடிகுடி-விலக்கப்பட்ட குடிவாழ்க்கை. கடிகுடி அம் மனையர் என்றது பரத்தையரை. அறுவாய்-அரியப்பட்ட இடம். சுரைக்குடுவையில் பொருந்தியிருக்கும் யாழ்த்தண்டின் நுனி முழுத்திங்களைப் பொருந்தியிருத்தல் போலத் தோன்றுகின்றது என்பது கருத்து. சுரை-சுரைக்குடுவை. தண்டு: ஆகுபெயர்; யாழ்.

1 - 2: வாய்............................கொட்புற்று

     (இ-ள்) வாய் வலம் கொண்ட-வாயாற் பாடும் வன்மை கொண்டதால்; வயிற்று எழு தழலுக்கு ஆற்றாது-வயிற்றில் மூளுகின்ற நெருப்பினைத் தாங்கமாட்டாமல்; அலைந்து காற்று எனக் கொட்புற்று-யாண்டும் அலைந்து காற்றைப் போலச் சுழன்று என்க.

     (வி-ம்.) வயிற்றில் தழல் எழுதற்கு வாயாற்பாடுதல் காரணமாகலின் வாய்வலம் கொண்ட தழலுக்கு என்றாள். தழல் என்றது ஈண்டுப் பசிப்பிணியை. கொட்புறுதல்-சுழலுதல்.

11 - 15: அளி..........................பாணற்கு

     (இ-ள்) அளிதார் பாடும்-வண்டு பூவிற் பாடுவது போலப் பாடுகின்ற; குரல் நீர் வறந்த-தொண்டை நீர் வற்றிய; மலைப்புள் போல நிலை குரல் அணந்து-மலைப்பறவை போன்ற