பக்கம் எண் :

மூலமும் உரையும்641



நிலைமையையுடைய தன் குரலைத் திறந்து; உணவு உளம் கருதி-உள்ளத்தில் உணவு பெறுதலை நினைத்து; ஒளி இசை பாட-ஒள்ளிய பாட்டைப் பாட; முள்தாள் மறுத்த முண்டகம் தலையமைத்து-முள்ளுள்ள காம்பை அகற்றிய தாமரை மலரைத் தலையிலே சூடிக்கொண்டு; ஒருபால் அணைந்த-நம் முன்றிலிலே ஒரு பக்கத்தில் வந்து நிற்கின்ற; இ உயர்மதி பாணற்கு-இந்தப் பேரறிவினையுடைய பாண்மகனுக்கு என்க.

     (வி-ம்.) அளி-வண்டு. தார்-மலர். வண்டு பாடுவது போற் பாடுகின்ற என்க. குரல்-குரல்வளை. மலைப்புள்-மலையிலே வாழும் இயல்புடைய ஒருவகைப் பறவை. முண்டகம்-தாமரை. உயர்மதிப் பாணன் என்றது இகழ்ச்சி.

16 - 17: அடுத்தனை........................கணமே

     (இ-ள்) கடுத்திகழ் கண்ணி-நஞ்சின் தன்மை திகழுகின்ற கண்ணையுடைய தோழி; அடுத்தனை-நீ என்னை அணுகி; இக்கணமே அ கல்லை உதவ வேண்டும்-இப்பொழுதே அதோ கிடக்கின்ற கல்லை என்பாற் கொடுத்தல் வேண்டும் என்க.

     (வி-ம்.) பாணனை எறிதற் பொருட்டு நீ அந்தக் கல்லை எடுத்துத் தரவேண்டும் என்றவாறு. அடுத்ததனை: முற்றெச்சம். இச்செய்யுட் கருத்திற்கும் இதற்கென எடுத்துக் காட்டும் திருக்கோவையார் செய்யுட் கருத்திற்கும் வேற்றுமையுண்மை யுணர்க. நெம்பெருமானைப் பாணன் சேரியில் சேர்த்துவிட்டு அறியாதான் போல அவனுக்குத் துயிலெழுமங்கலம் பாடவும் வந்துவிட்டான். ஆதலால் இவனைக் கல்லால் அடித்தல் வேண்டும்; அக் கல்லை எடு எனத் தலைவி தொழியை நோக்கிக் கூறியவாறாகக் கொள்க.

     இதனை, கூடல் நெடுஞ்சடைப் புரங்கன் பதமலர் சுமந்த நம்மூரனை. அக்கடி குடிமகனை யவர்மனை புகுத்தி, இசையுளர் தண்டெடுத்து, குரநீர் வறந்த மலைப்புட்போல உணவுளங் கருதி, இசைபாட ஒருபாலணைந்த இவ்வுயர்மதிப் பாணற்கு, கடுத்திகழ் கண்ணி! அடுத்தனை; இக்கணமே, அக்கல்லை யுதவ வேண்டுமென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு-வெகுளி. பயன்-பாணனை வெருட்டுதல். கல்.-41