| |
களனும்
பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதன் மிகுதி யுளப்படப் பிறவு
நாடு மூரு மில்லுங் குடியும்
பிறப்புஞ் சிரப்பு மிறப்ப நோக்கி
யவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ
யனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் |
என்னும் விதிகொள்க.
1
- 7: முதுக்குறை..............................புறத்து
(இ-ள்)
முதுக்குறை பெண்டிர் வரத்து இயல் குறிப்ப-பேரறிவு படைத்த மகளிர் வரம் கேட்கவும்;
வழிமுதல் தெய்வதம் வரைந்து-தங்கள் மரபின்முதலாகிய குலதெய்வத்தை அழைத்து; அத்ற்கு
பரு காடு பலி உறுத்தி பராவ-பெரிய காட்டின்கண் பலிகொடுத்து வழிபடா நிற்பவும்; அக்கிழமை
அயலினர்-அவ்வழிபாட்டிற்குரிய அயலோர்; நா உடன்று ஏத்த-நாக்குழறி வாழ்த்தவும்;
பக்கம் குழுநர்-நார்புறத்தினின்றும் வந்து சூழ்கின்றார் ஆக; குரங்கம் மண்டபப் பெற்று
உயிர்த்த-ஒரு மானானது நிலத்திற்படும்படி கருக்கொண்டு ஈன்ற; அரும் பொற்கொடி மடந்தை
தன்-அருமையான வள்ளியம்மையை நிகர்த்த எம்பெருமாட்டியினது; இருவிழி பொலி அ திருநகர்ப்புறத்து-காண்போருடைய
இரண்டு விழிகளும் நிரம்பப்பொலியாநின்ற அந்த அழகிய நகரிடத்தினின்றும் என்க.
(வி-ம்.)
முதுக்குறை-பேரறிவுடைமை. வழி-தம்மரபு. தெய்வதம் தெய்வம். வரைதல்-அழைத்தல். பராவல்-வழிபடுதல்.
கிழமை-உரிமை. சூழுநர்-சூழ்கின்றவர். குரங்கம்-மான். உயிர்த்தல்-ஈனுதல். மான் ஈன்ற
பொற்கொடி என்றது வள்ளியம்மையை. மடந்தை என்றது தலைவியை. பொற்கொடியை நிகர்த்த
மடந்தை என்க.
8
- 9: கரி...........................ஏகன்மின்
(இ-ள்)
கரியுடன் உண்ணார் பழியுளம் ஒத்த-விருந்தினருடன் உண்டு வாழாத மடவோர்களுடைய பழிபடு
நெஞ்சத்தை ஒத்த; இருள் உடை பெருமுகில்-இருளையுடைய பெரிய மேகங்க சூழ்ந்த இரவின்கண்;
வழிதெரிந்து ஏகன்மின்-வழிகண்டு வருதல் அருமை ஆதலின் நீவிர் வாராதொழிவீராக! என்க.
(வி-ம்.)
கரி-சான்று. உண்ணுதற்கு உடனிருந்து உண்போராகிய விருந்தினரே சான்றாதலின் கரி என்றது
ஈண்டு விருந்தினரை உணர்த்தி நின்றது. இல்லறத்தார்க்கு விருந்தோம்பாமையே பெரும்
|