பக்கம் எண் :

650கல்லாடம்[செய்யுள்93]



பழியாதலின் கரியுடன் உண்ணார் பழியுளம் என்றார். இருளையுடைய பெருமுகில் என்றாரேனும் பெருமுகிலையுடைய இருள் என்பது கருத்தாகக்கொள்க. வழி தெரிந்து ஏகன் மின் என்றது வழிதெரிந்து வருதல் அரிதாகலின் வராதொழிக என்பதுபட நின்றது.

10 - 15: அரிமான்........................................தோற்று

     (இ-ள்) அரிமான் உறுத்த நூற்றுவர்-சிங்கம்போல் சினந்த துரியோதனன் முதலிய நூற்றுவரால்; மதித்த புடைமனச் சகுனி-நன்கு மதிக்கப்பட்ட அறத்திற்குப் புறம்போய நெஞ்சையுடைய சகுனி என்பவனால்; புள்ளி அம் கவற்றில்-புள்ளிகளையுடைய காய்களையுடைய சூதாட்டத்தின்கண்; ஐந்தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு-ஐவேறு தொழில்களுக்குப் பொருந்திய தருமன் முதலிய பாண்டவர் ஐவரும் தோற்று; ஓதிமம் எரிமலர் தவிசு இருந்து-அன்னப்பறவைகள் செந்தாமரை மலராகிய இருக்கைகளில் இருந்து ஆரவாரியாநிற்பவும்; ஊடு உகள் சிரலை பச்சிறவு அருந்தும்-அவ்விடத்திற் பாய்ந்து மீன்கொத்திப் பறவை பசிய இறாமீனைக் குத்தித் தின்றற்கிடமான; பழனம் குருநாடு அளிபதி தோற்று-கழனிகளையுடைய குருநாடு என்னும் தம்மாற் பாதுகாக்கப்பட்ட நாட்டை இழந்து என்க.

     (வி-ம்.) அரிமான்: இருபெயரிட்டு; சிங்கம். உறுத்தல்-சினத்தல். புடைமனம்-அரத்திர்குப் புறம்பாய மனம். கவறு-சூதாடுகருவி. அரசாளல் தருமனுக்கும், மற்போர் வீமனுக்கும், விற்போர் விசயனுக்கும், புரவியோம்பல் நகுலனுக்கும், ஆனிரையோம்பல் சகதேவனுக்கும் தனித்தனியே உரிமையுடைய தொழிலாகலின் ஐந்தொழிற்கமைந்த ஐவர் என்றார். புறகிடல்-தோற்றல். ஓதிமம்-அன்னம். எரிமலர்-தாமரைமலர். சிரலை-மீன்கொத்திப் பறவை. பச்சிறவு-பசிய இறாமீங் பழனம்-கழனி. குருநாடு-குரு என்னும் அரசனால் ஆளப்பட்ட நாடு. அளிபதி: வினைத்தொகை.

16 - 22: முன்னுறும்...........................................தூதினர்க்கு

     (இ-ள்) முன்னுறும் உழுவயின் பன்னிரு வருடம்-முன் செய்த வினை காரணமாகப் பன்னிரண்டு ஆண்டுவரை; கண்டீரவத்தொடு கறையடி வளரும் குளிர் நிழல் அடவி உறை கொண்டு-சிங்கமும் யானையும் வளருகின்ற குளிர்ந்த நிழலையுடைய காட்டின்கண் உறைந்து; அகன்றபின்-கழிந்தபின்னர்; அனைத்துள் வஞ்சமும் அழித்து-இடையில் நூற்றுவரால் செய்யப்பட்ட வஞ்சனைகள் எல்லாவற்றையும் கெடுத்து; நிரை மீட்சி முடித்து-விராடனுடைய பசுக்களைப் போரின்கண் மீட்டு; தமது முடியாப் பதிபுக-அவ்வைவரும் தம்முடைய கேடில்லாத நாட்டினைக் கைக்கொள்ளும் பொருட்டு; ஊடி-துரியோதனனுடன்