|
பகைத்துக்கொண்டு;
முறையே எமக்கு உளமண் கருதிச் சேறி என்று இசைப்ப-அறநூன் முறைப்படி எமக்கு உளவாகிய
நாடுகளைப் பெறக்கருதிப் பெருமான்! தூது செல்வாயாக! என்று வேண்டிக் கொள்ளுதலால் அவ்வேண்டுகோட்கிணங்கி;
செல்பண்ணித் தூதினர்க்கு-செல்லுந் தொழிலாகிய தூதையுடைய திருமாலுக்கு என்க.
(வி-ம்.)
ஊழ் உழு என நின்றது. கண்டீரவம்-சிங்கம். கறையடி-யானை. அடவி-காடு. உறை கொண்டு-தங்கியிருந்து.
நிரை-ஆனிரை. முடியாப்பதி-கேடில்லாத நாடு. ஊடுதல்-பகைத்தல். முறை-அறநூன்முறை. தூதினர்-துதுத்
தொழிலையுடையயோர் என்றது திருமாலை.
23
- 25: ஒருகால்.....................................எனவே
(இ-ள்)
ஒருகால் அளித்த-ஒரு திருவடி தந்தருளிய; திருமா மிடற்றோன்-அழகிய கரிய மிடற்றினையுடைய
சிவபெருமானுடைய; பாடல் சான்ற தெய்வக் கூடல்-பெருமை நிறைந்த தெய்வத் தன்மையுள்ள
மதுரை நகரத்தை; கூடார் குணங் குறித்து என-அடையாதார் குணத்தைக் குறித்தாற் போல என்க.
(வி-ம்.)
கால்-திருவடி. மிடறு-கழுத்து. மா-கருமை. கூடல் கூடார் குணங்குறித்தாற்போல ஏகன்மின்
என இயையும். இதனை, தெய்வக் கூடல் கூடார் குணங்குறித்தென்ன,
குரங்கம் மண்படப் பெற்றுயிர்த்த மடந்தை, தன்னிருவிழி பொலியத், திருநகர்ப்புறத்து,
கரியுடனுண்ணார் பழியுளமொத்த இருளுடைப் பெருமுகில், வழிதெரிந்து என வினைமுடிவு செய்க.
மெய்ப்பாடும் பயனும் அவை.
|