|
இருவகை ஏழ் எனும் திரு
உலகு அனைத்தும் கொடுத்தவன்-கீழேழுலகம் மேலேழுலகம் என்னும் இருவகைப்பட்ட செல்வமிக்க
உலகம் முழுவதையும் வழங்கிய சிவபெருமானுடைய; கூடல் வழுத்தினர் போல-மதுரைத் திருப்பதியை
வழிபட்ட மெய்யடியார் போல; ஒன்னலர் முற்றி-பகைவரையெல்லாம் வென்று; ஒருதேர் வரத்தினர்க்கு-ஒப்பற்ற
தேர்மேல் வருதலையுடைய நம்பெருமானுக்கு; இருபுறம் போற்ற ஒருங்குபு படர பாசறை சென்ற
நாள்-தம்மிரு பக்கத்தினும் வாழ்த்தெடுக்கும்படி படைகள் நெருங்கிச் சூழும்படி முன்னர்ப்
பாசறைக்குப் போன நாள்களை; நிலம் குழிய எண்ணி-நிலம் குழிந்துபோம்படி ஒற்றி எண்ணிய
கையால்; விரல் தேய்ந்த-விரல் தேய்ந்துள்ள; செங்கரம் கூப்புக-நின் சிவந்த கைகளைக்
கூப்பி வணங்குவாயாக என்க.
(வி-ம்.)
மறை-வேதம். இறைவனுடைய திருவடிகளை மறைகள் வழிபட்டமையால் திருமறைக்காடு என்னும் பெயர்
பெற்ற திருப்பதியின்கன் என்றவாறு. அஃது இக்காலத்தே வேதாரணியம் என்று வழங்கப்படுகின்றது.
வழுத்துதல்-வாழ்த்தி வழிபடுதல். மணி-அழகு. கவர்மதி: வினைத்தொகை. கருப்பை-கரிய
எலி. கீழேழுலகம் மேலேழுலகம் என்பவாகலின் இருவகை ஏழெனும் உலகு என்றார். இறைவன்
திரு முன்னர் ஏற்றப்பட்ட நெய்யைப் பருக எண்ணி ஒரு காரொலி அவ்விளக்கில் முகத்தை
இட்டதாக அவ்வழி அதன் கண்ணதாகிய திரி தூண்டப்பட்டு விளக்கு நன்கு எரிதலின் அச்செயல்
இறைவனால் சிவபுண்ணியச் செயலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மகிழ்ந்து அவ்வெலியை மறுமையில்
அரசனாக்கி உலகாளச் செய்தனன் என்பது வரலாறு. ஒன்னலர்-பகைவர். இறைவன் அடியார்
உட்பகை புறப்பகைகளைத் துவரக்களைதல் போல நம்பெருமானும் தம் பகைவர்களை யெல்லாம்
வென்று வாகை சூடி வருவார் என்பாள் கூடல் வழுத்தினர் போல ஒன்னலர் முற்றி ஒரு தேர்
வரத்தினர் என்றாள். வரத்தினர்-வருதலையுடையர். குழிய-குழிந்த, தேய்ந்த. தலைவன்
சென்ற நாள்களை விரலால் தரையிற் கீறி நாள்தொறும் அவற்றை விரலால் ஒற்றி ஒற்றி
எண்ணுதலின் அவள் விரல் தேய்ப்புண்டிருந்தது என்க. இதனோடு,
வாளற்றுப்
புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் |
(குறள்.
1261) |
என்னும் திருக்குறளையும்
ஈண்டு நினைக. நம்பெருமான் வாய்மை பிறழார். ஆதலின் அவர் கூறிச்சென்ற காலத்தே
மீண்டு வருதல் ஒருதலை. அவர் குறித்துச் சென்ற கார்ப்பருவம் இதோ வந்துற்றது. ஆதலால்
இனி அவர் தே வருதலும் ஒருதலை; எனவே நீ வருந்தற்க! என்றவாறு.
இதனை,
கார் வந்தது கண்டனை, இனி மாழ்குதலை விடுக, கூடல் வழுத்தினர் போல ஒன்னலரை முற்றித்
தேர் வரத்தினர்க்கு, கரங் கூப்புக வென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனுமவை.
|