|
இயலாமல் தாமரை மலர்கள்
வாடாநிற்பவும்; கயிவரம் இனத்தொடு எதிர் மலர-ஆம்பல்கள் தம்மினத்தோடே எதிர்ப்படும்
இடந்தோறும் மலராநிற்பவும்; குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற-கன்னி மகளிரின் காமமும்
கிணற்று நீரும் உள்ளே சுடாநிற்பவும்; நிலமகள் உடலமும் திங்களும் குளிர-நிலமகளின்
உடம்பும் திங்கள் மண்டிலமும் குளிராநிற்பவும்; ஒலி கடல் இப்பி-முழங்காநின்ற கடலினிடத்துள்ள
இப்பிகள்; தரலம் சூல்கொள-முத்துக்களைக் கருக்கொள்ளவும்; இவை முதல் மணக்க-இன்னோரன்ன
குறிகள் தோன்றும்படி என்க.
(வி-ம்.)
இச்செய்யுளில் கார்ப்பருவ நிகழ்ச்சிகள் பெரிதும் அழகாக வருணிக்கப்பட்டிருத்தல்
உணர்க. மணந்துடன் போகுநர் என்றது இயற்கைப் புணர்ச்சி எய்திய தலைவன் தலைவியர்களை.
பாலை வழியில் தலைவன் தலைவியர் உடன்போக்கிற்கு எயிற்றியர் இயக்கம் தடையாயிருந்தது
என்பது கருத்து. புலி-ஆகுபெயர். புலி போன்ற குரலையுடைய எயிற்றியர் எனினுமாம். எயிற்றியர்-பாலைநில
மகளிர். பூ-நிலம். குழவியம் கதிர்-இளஞாயிறு. முகில்கள் மறைத்தலின் தாமரை மலர்கல்
ஞாயிற்று ஒளி பெறாமல் வருந்தின என்பது கருத்து. திருமலர் திருமகள் இருக்கையாகிய மலர்.
எனவே தாமரைமலர் ஆயிற்று. கயிரவம்-ஆம்பல். இனம் என்றது நெய்தல். குவளை முதலியவற்றை.
குமரியர்-கன்னிமகளிர். கார்ப்பருவத்தில் நீர் உள்ளே வெதுவெதுப்பாக இருத்தல் இயல்பு.
கூவல்-கிணறு. தரளம்-முத்து. இப்பிகள் மழை பெய்யுங்கால் செதிளைத்திரந்து மழைத்துளியை
ஏற்றுக்கொள்ளுதலால் அத்துளி முத்தாகும் என்பது நம் முன்னோர் கருத்து. ஆதலின் இப்பி
தரளம் சூல்கொள என்றார். மணத்தல்-தோன்றுதல்.
30
- 31: எழுந்த...............................விடுமதி
(இ-ள்)
எழுந்த கார் கண்டை-வந்த கார் காலத்தை நீ கண்டாய் அல்லையோ ஆகலின்; வறுநீர்
மலர் என மாழ்கலை விடுமதி-வற்றிய நீரிலுள்ள மலர்கள் வாடுதல் போன்று நெஞ்சம் வாடுதலை
இனி ஒழிவாயாக என்க.
(வி-ம்.)
நம்பெருமான் கார்ப்பருவத் தொடக்கத்தே மீண்டு வருவேன் எனக் கூறிப் போயினராதலின்
அவர் கூறிய கார்வந்தது. இனி அவர் தேர் வருதல் ஒருதலை. ஆதலின் வருந்தற்க என்றவாறு.
கார்: ஆகுபெயர். கண்டை: வினைத்திரி சொல். மாழ்கல்-வாடுதல். மாழ்கலை என்பதை
முன்னிலை யொருமை வினைமுற்றாகக் கொள்ளினுமாம். மதி: முன்னிலையசை.
32
- 39: மறை..........................கூப்புக
(இ-ள்)
மறை அடி வழுத்திய மறை வனத்து ஒருநாள்-வேதங்கள் திருவடிகளை வழிபட்ட திருமறைக்காட்டில்
முன்னொரு காலத்தே; மணிசுடர் நறுநெய் கவர்மதி கருப்பைக்கு-அழகிய திருவிளக்கின் நெய்யைப்
பருகுதற்கு நினைவுற்ற காரெலிக்கு; கல்.-42
|