பக்கம் எண் :

656கல்லாடம்[செய்யுள்94]



காலத்தே தோயாதிருத்தலின் தயிரொடு என்றார். இடைமகளிர் தம் தயிர்ப் பானையோடு குளிரால் நடுங்கி இருண்டனர் என்பது கருத்து. முசு-குரங்கு. பிணவு-பெண். முழையுறை: பண்புத்தொகை.

16 - 22: கணமயில்.......................................ஒற்ற

     (இ-ள்) மயில் கணம் நடன் எழ-மயிலினங்கள் கூத்தாடாநிற்பவும்; காளிகூத்து ஒடுங்க-காளி கூத்தாடல் ஒழியவும்; சாதகம் முரல் குரல் மடைவாய் திறப்ப-வானம்பாடிப் பறவைகள் பாடுங்குரலெடுத்து மூடிய வாயைத் திறந்து பாடாநிற்பவும்; மாகுயில் மாழ்கி கூக்குரல் அடைப்ப-மாமரத்தின்கண் குயில்கள் மயங்கிக் கூவும் தங்குரலோசையை அடக்கவும்; பனிக்கதிர் உண்ண சகோரம் பசிப்ப-குளிர்ந்த திங்களின் நிலாவை உண்ணுதற்குச் சகோரப்பறவைகள் பசித்திருக்கவும்; உடை நறவு உண்டு வருடை வெறுப்ப-தேனடை உடைந்து ஒழுகும் தேனைப் பருகி மலையாடுகள் அவற்றை வெறுப்பவும்; அகில் சுடு பெரும் புனம் உழுபதன் காட்ட-அகின் மரங்களைச் சுட்ட பெரிய கொல்லைகள் உழுவதற்குரிய பருவத்தைக் காட்டா நிற்பவும்; வெறி விழிச் சவரர் மாஅடி ஒற்ற-வெறித்த கண்களையுடைய வேடர்கள் விலங்குகளின் அடிச்சுவடுகளை ஆராயா நிற்பவும் என்க.

     (வி-ம்.) கணம்-கூடடம். நடன்-நடம்: போலி. கூத்து. காளி-பாலைநிலத்தெய்வம். பாலைத்தன்மை கெடலின் அவள் கூத்தொடுங்குவதாயிற்றென்க. சாதகம்-வானம்பாடிப்பறவைகள். இவை மழைத்துளியை உண்டு வாழ்வன. ஆதலின் இவை முகிலை கண்டுழி வாய் திரந்து பாடலாயின என்றவாறு. குயில் வேனிற் காலத்தில் கூவிக் கார்ப்பருவத்தில் குரலவிந்து இருக்கும் இயல்புடையன என்க. சகோரம்-நிலவொளியை உண்டுவாழும் ஒருவகைப் பறவை. கார்ப்பருவத்தில் இவற்றிற்கு நிலவொளி கிடைத்தலின்மையின் பசித்திருந்தன என்பது கருத்து. பனிக்கதிர் என்றது நிலாவை. நறவு-தேன். வருடை-மலையாடு. புனம்-கொல்லை. பதன்-செவ்வி. வெறிவிழி-வினைத்தொகை. சவரர்-வேடர். மா-விலங்கு. அடி ஒற்ற என்றது அவற்றை வேட்டையாடுதற் பொருட்டு அடிச்சுவடுகளை ஆராயாநிற்ப என்றவாறு.

23 - 30: மணந்து.......................................மணக்க

     (இ-ள்) மணந்து உடன் போகுநர்க்கு-களவினால் மணந்து பாலை நிலத்தே செல்லும் காதலர்களுக்கு; உயங்குவழி மறுப்ப-அவர்கள் வெப்பத்தால் வருந்துதற்குக் காரணமான பாலைநில வழியைத் தடுத்தற்கு; புலிக்குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப-புலிநகம் அணிந்த கழுத்தையுடைய பாலைநிலமகளிர் அந்நிலத்திலே இயங்காநிற்பவும்; குழவி அம் கதிர் பெற திருமலர் அணங்க-இளஞாயிற்றின் ஒளியைப் பெறுதற்கு