பக்கம் எண் :

மூலமும் உரையும்655



     (இ-ள்) அளிகள் பாட்டு எடுப்ப-வண்டுகள் இசை பாடத்தொடங்காநிற்பவும்; புறவு பாட்டு ஒடுங்க-புறாக்களின் குரலோசை அடங்காநிற்பவும்; காந்தள் அம் கடுக்கை கனல் தனம் மலர-செங்காந்தளும் அழகிய கொன்றையும் நெருப்புப் போலவும் பொன்போலவும் மலராநிற்பவும்; கோடல் ஈன்று கொழுமுனை கூம்ப-வெண்காந்தள் அரும்பிக் கலப்பைக் கொழுமுனை போல் கூம்பாநிற்பவும்; பிடவும் களவும் நிறை பூப்ப-பிடவஞ்செடியும் களாவும் நிறைய மலரவும்; வான்புறம் பூத்த மீன்பூ மறைய-வானத்தின்கண் தோன்றிய விண்மீன்களாகிய மலர்கள் மறையவும்; கோபம் ஊர்தர-இந்திர கோபங்கள் யாண்டும் தவழாநிற்பவும்; மணிநிரை கிடப்ப-மணித்திரள்கள் அசைவின்றிக் கிடப்பவும்; தென்கால் திகைப்ப-தென்றல் அடங்கவும்; வடகால் வளர-வாடை மிகாநிற்பவும்; பொறிவிழி பாந்தள் புற்று அளைவதிய-தீப்பொறி சிதறுகின்ற கண்ணையுடைய பாம்புகள் புற்றின்கண் வளையில் ஒடுங்காநிற்பவும் என்க.

     (வி-ம்.) அளிப்பாட்டெடுத்தல் முதலியன கார்ப்பருவத்தொடக்கத்தில் நிகழும் என்க. அளிகள்-வண்டுகள். புறாக்கள் கார்ப்பருவத்தில் ஆரவாரமின்றி அடங்கி இருத்தல் இயல்பு. செங்காந்தண் மலருக்குக் கனலும் கடுக்கை மலருக்குத் தனமும் உவமைகள். இது முறை நிரனிறை உவமை. கடுக்கை-கொன்றை. தனம்-பொன். கோடல்-வெண்காந்தள். இதன் அரும்பிற்குக் கொழுமுனை உவமை. களவு-களாச் செடி. களவும் ஒடு என்புழி ஒடு, இசைநிறை. மீன்-விண்மீங் கோபம்-இந்திர கோபம். தென்கால்-தென்றல். வடகால்-வாடை. பாந்தள்-பாம்பு. அளை-வளை.

9 - 15: வரி.....................................அடங்க

     (இ-ள்) வரி உடல் ஈயல் வாய் தொறும் எதிர்ப்ப-வரிகளையுடைய ஈயல் இடந்தொறும் எதிர்ப்படவும்; இடிகுரல் ஆன் ஏறு இனம் எதிர் செறுப்ப-இடியோசையுடனே எருதுக் கூட்டங்கள் எதிர் முழங்கவும்; பொறிக்குறி மடமான் சுழிதலை கவிழ-புள்ளிகளாகிய குறிகளையுடைய இளமான்கள் சுழியுடைய தம் தலையைக் கவிழ்த்துக் கொள்ளவும்; முடை உடல் அண்டர் படல் இடம் புகுத-முடை நாற்றமுடைய உடலையுடைய இடையர்கள் படல் அமைந்த தம் சிறு குடிலில் புகா நிற்பவும்; கோவியர் குலனொடு அளையுடன் குளிர்ப்ப-இடைச்சியர் தங்கூட்டத்தோடும் தயிரோடும் குளிரடையாநிற்பவும்; காயாக் கண்கொள-காயாஞ் செடிகள் கண்போல மலரா நிற்பவும்; முல்லை எயிறு உறழ-முல்லைக்கொடிகள் மகளிர் பற்கள் போன்று அரும்பவும்; முசுக்கலை பிணவுடன் முழை உறை அடங்க-ஆண் குரங்க்கள் தத்தம் பென் குரங்குகளுடனே மலைமுழையாகிய தம்மிருப்பிடத்தே அடங்காநிற்பவும் என்க.

     (வி-ம்.) ஈயல்-இறகு பெற்றுப் பறக்கும் சிதல். இச்சிதலின் உடலில் வரிகள் உண்மையின் வரியுடல் ஈயல் எனப்பட்டது. கார்ப்பருவம் மழை பெயத் தொடங்கும் முன்னர் இவைகள் புற்றினின்றும் வெலிப்பட்டுப் பறந்து வீழ்ந்து மடியும் இயல்புடையன. இடிமுழங்க அவற்றிற் கெதிராக ஆனேறுகளும் முழங்க என்பது கருத்து. பொறி-புள்ளி. முடை-ஒருவகை நாற்றம். அண்டர்-இடையர். படலிடம்-படலாலாய குடிசையுமாம். கோவியர்-இடைச்சியர். தயிர் குளிர்