பக்கம் எண் :

666கல்லாடம்[செய்யுள்95]



36 - 40: அக்கடல்..............................கண்ணவன்

     (இ-ள்) அக்கடல் வயிறு அடைத்து-இக்கடலின்கண் திருவனை கட்டி; அரக்கன் உயிர் வௌவி-இராவணனைக் கொன்று; இலங்கை அ அரக்கற்கு இளையோன் பெஉம என-இலங்கையை அந்த இராவணனுடைய தம்பியாகிய விபீடணன் பெறுவானாக என்று முடிசூட்டி; தமது ஊர் புகுந்து முடி சுமந்தோர்க்கும்-தமக்குரிய அயோத்தியில் மீண்டும் வந்து முடிசூட்டிக் கொண்டு அரசாட்சி செய்தருளிய இராமனாகிய திருமாலுக்கும்; நான்முகத்தவற்கும்-பிரமதேவனுக்கும்; இருபால் பகுத்த ஒருநுதல் கண்ணவன்-தனது இரண்டு பாகத்தையும் பகுத்து வழங்கிய ஒப்பற்றிக் கண்ணையுடைய சொக்கலிங்கக் கடவுள் என்க.

     (வி-ம்.) அரக்கன் என்றது இராவணனை. இளையோன் என்றது அவன் தம்பியருள் விபீடணனை. தமது என்றது அயோத்தியில் வாழ்வோரை உளப்படுத்திக் கூறியபடியாம். ஒருமைபன்மை மயக்கம் அன்று, யான் எம்மூர் செல்வன் என்றாற்போலக் கொள்க. இருபாற் பகுத்த ஒருநுதற் கண்ணவன் என்புழிச் செய்யுளின்பம் உணர்க.

40 - 43: உறைதரு................................சென்மே

     (இ-ள்) உறைதரு கூடல்-வீற்றிருக்கின்ற மதுரையின்கண்; தெளிவேல் கண் குறுந்தொடியினர்-ஒளியையுடைய வேல் போன்ற கண்ணையும் குறிய தொடியினையும் உடைய நின்பரத்தையர் நீ ஈண்டு வந்ததனை; காணின்-கண்டால்; நின்பால் அளியும் நீங்கி இன்பும் இன்று ஒழிக்கும் எம் கால் தொடல்-அவர்க்கு உன்னிடத்துள்ள அருளும் ஒழியும்; மேலும் நீ அவர்பால் நுகரும் இன்பத்தையும் அக்காட்சிதானே இன்றே ஒழிக்கும் ஆதலால் எமது காலைத் தீண்டாதே கொள்; சென்மே-நீ அவர்பால் செல்லுவாயாக! என்க.

     (வி-ம்.) தெளி-ஒளி. “தெளிவளர் வான்சிலை” (திருக்கோவையார் 16) எனவரும் திருக்கோவையார் உரையானும் உணர்க. தெளிகண் வேற்கண் என்க்கொண்டு தெளிந்த கண் எனினுமாம். ஈண்டுத் தெளிவு விளக்கம். குறுந்தொடியினர் என்றது பரத்தையரை. இன்பம் இன்று ஒழிக்கும் என்றதற்குக் காணின் அக்காட்சி தானே இன்பத்தையும் இன்று ஒழிக்கும் என எழுவாய் வருவித்தோதுக. சென்மே என்புழி ஏகாரம் அதற்குரிய மெய்யூர்ந்து வந்த முன்னிலையசை.

     இதனை, புனலணியூர! முடிசுமந்தோர்க்கும் நான்முகத்தவற்கும் இருபாற் பகுத்த ஒருநுதற் கண்ணவன் கூடலில், தொடியினர் காணின், நின்பாளணியுமுன்பு நீங்குவர், ஆதலா எங்கால் தொடல் சென்மே! என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.