கவர்ந்து கொண்டு நகே
எய்திய பின்னர்த் தன் சிற்றன்னையாகிய கைகேயி வஞ்சத்தை உள்ளே வைத்துக் காடேகுக!
என ஏவுதலாலே என்க.
(வி-ம்.)
தானவர்-அரக்கர். அவர் இராவணன் முதலியோர். வானவர்-தேவர்கள். அவர் இந்திரன்
முதலியோர். தயரதன் என்னும் பெயர்க்கு, பத்துத்தேரினன் என்பது பொருளாகலின் தேர்
என்னும் முதலுக்கேற்ப அடை கொடுத்து உழல்தேர் பத்தினல் என்றார். தன்னுடைய தேரினால்
பத்துத் திசைகளையும் வென்றமையின் இராமன் தந்தை தயரதன் எனப்பட்டான். நாறுதல்-தோன்றுதல்.
முனி-விசுவாமித்திர முனிவன். தழற்செல்வம்-வேள்வியாகிய செல்வம். பழங்கல் என்றது
கௌதமனால் சபிக்கப்பட்டுக் கல்லாய் கிடந்த அகலிகையை மிதிலை-சனகமன்னனுடைய நகரம்.
கொடுமரம்-வில். அவன்மகள்-சனகனுடைய மகளாகிய சிதை என்க. மழுவிராமன்-பரசுராமன்.
அன்னை என்றது கைகேயியை. வினை என்றது வஞ்சம் என்பதுபட நின்றது.
30
- 35: துணையும்..............................விடுத்து
(இ-ள்)
துணையும் இஅவலும் தொடர-வாழ்க்கைத் துணைவியாகிய சீதையும் தம்பியாகிய இலக்குவனும்
பின் தொடர்ந்துவர; கான்படர்ந்து-காட்டிற்குச் சென்று; மாகுகன் நதிவிட ஊக்கி-வேடர்
தலைவனாகிய சிறப்பினையுடைய குகன் கங்கையாற்றினின்றும் அப்பாற் செலுத்த மேலும் சென்று;
வனத்து கவந்தன் கராதி மாரீசன் உயிர்மடித்து-அக்காட்டின்கண் கவந்தனையும் கரனையுள்ளிட்ட
அரக்கர் பலரையும் மாரீசனையும் கொன்று; இருசிறை கழுகினற்கு-இஅண்டு சிறகுகளையுடைய கழுகினத்திற்றோன்றிய
சடாயுவிற்கு; உலந்த கடன் கழித்து-இறுதிக்கடன் செய்து முடித்து; எறிவளி மகனை நட்டு-வீசாநின்ற
காற்றின் மகனாகிய அனுமனை நட்புக் கொண்டு; ஏழு மரத்தினிக்கும் அரிக்கும் கருங்கடற்கும்
ஒரோஒரு கணை விடுத்து-மரா மரம் ஏழிற்கும் வாலி என்னும் குரங்க்ற்கும் கரிய கடலுக்குந்
தனித்தனி ஒவ்வோரம்பு எய்து என்க.
(வி-ம்.)
துணை-வாழ்க்கைத்துணவி (சீதை). இளவல்-தம்பி என்றது இலக்குவனை. வேடர்களுக்கு அரசனாதல்
பற்றிக் குகனை மாகுகன் என்றார். நதி கங்கையாறு. கராதி-கரன் தூடணன் முதலிய அரக்கர்கள்.
கவந்தன் கராதி மாரீசன் என முறைப்படுத்தாமல் செய்யுளாகலின் கராதி மாரீசன் கவந்தன்
என முறை பிறழ வைத்தார். கழுகினன்-கழுகினத்திற்றோன்றியவன்; என்றது சடாயுவை. உலந்த
கடன்-இறந்துழிச் செய்யும் கடமை. வளிமகன்-காற்றின் மகன்: என்றது அனுமனை. நடுதல்-நட்புச்
செய்தல். அரி-குரங்கு; என்றது வாலியை.
|