|
25
|
|
காருட
லனுங்கிய பைங்கட் கறையடி
சென்னி தூங்கி நின்றது காட்டு
நெடுமரை யதள்வேய் சில்லிடக் குரம்பையின் |
|
|
|
மற்றதன்
றோலி லுற்றிரு வீருங்
கண்படுத் திரவி கீறுமு
னெண்பட நும்பதி யேகுதல் கடனே. |
(உரை)
கைகோள்: களவு. கண்டோர் கூற்று.
துறை: நெறிவிலக்கிக்
கூறல்
(இ-ம்.)
இதற்கு :பொழுது மாறு முட்குவரத் தோன்றி, வழுவினாகிய குற்றங் காட்டலு, மூரது சார்வ்ய்ஞ்
செல்லுந் தேயமு, மார்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் (தொல். அகத் 40) என்னும்
விதிகொள்க.
1
- 2: மின்......................................வேலோய்
(இ-ள்)
மின்பொலி வேலோய்-மின்னல்போல ஒளிருகின்ற வேற்படையை யுடையோய்! என்க.
(வி-ம்.)
மின்-மின்னல். வேலோய் என்றது தலைவனுடைய மறப் பண்பினைச் சிறப்பித்து நின்றது.
12:
வனப்பு...................................இடைந்தனள்
(இ-ள்)
இ அணங்கு-இப் பெருமகளோ-; வனப்பு உடை அனிச்சம் புகை மூழ்கியது என-அழகுடைய அனிச்ச
மலரானது புகையால் மூடப்பட்டது போல; அ அதர் பேய்த்தேர்க்கு இடைந்தனள்-நீவிர் நடந்து
வந்த அப்பாலை வழியில் எழுந்த கானலால் நலியப்பட்டுப் பெரிதும் வருந்தி இருக்கின்றனள்
என்க.
(வி-ம்.)
அணங்கு என்றது தலைவியை; உவமையாகுபெயர். அணங்கு-தெய்வப்பெண். அதர்-வழி. பேய்த்தேர்-கானல்.
இடைதல்-வருந்துதல். கானலால் தாக்குண்டு வருந்தியிருக்கின்றாள் என்பது கருத்து. தோற்றத்தால்
தலைவியின் தெய்வத்தன்மையைக் கண்டு இப்பணங்கு என்றார்.
3
- 8: தெந்திசை...........................பலரே.
(இ-ள்)
தெந்திசைக் கோமகன் பகடு பொலிந்து அன்ன-தெற்கின் கண்ணதாகிய உலகிற்கு அரசனாகிய
கூற்றுவனுடைய ஊர்தியாகிய எருமைக்கடா பொலிவுற்றிருந்
|