|
திருக்கோவையார் 176 ஆம் செய்யுள்
ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி
அஃதாவது:
தலைவன் சிறைப்புறமாக வந்து நின்றமையை அறிந்த தோழி தலைவியின் ஆற்றாமை கூற, அதுகேட்ட
தலைவன் இரவுக்குறியிடத்தே சென்று நின்றான.் அவனைத் தோழி எதிர்ப்பட்டு ஐய! நீ
கான்யாறு பலவும் நீந்திக் கைவேலே துணையாக அஞ்சாது வருகின்றனை; யாங்களோ இச் சோலையில்
உறையும் தெய்வங்களுக்கு அஞ்சுகின்றோம். ஆதலின் நீ இங்ஙனம் இரவில் வருதல் தவிர்க!
என்று தங்கள் அச்சம்கூறி வரவு விலக்கியது என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
தாருறு கொன்றையன்
றில்லைச்
சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
நீந்திவந் தானினது
போருறு வேல்வயப் பொங்குரு
மஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாஉவரற்
பாற்றன்று தூங்கிருளே.
|
நாறு வார்குழ னவ்வி நோக்கி ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.
(இ-ள்)
தார் உறு கொன்றையன்-மாலையாகிய மிக்க கொன்றைமலரை யுடைஉயவனும்; தில்லைச் சடைமுடியோன்-தில்லையின்கண்
எழுந்தருளிய சடைமுடியையுடையவனும் ஆகிய சிவபெருமானுடைய; கயிலை நீர் உறுகான் யாறு அளவில்
நீந்தி வந்தால்-கயிலைமலையின் நீராற் பெருகிய காட்டியாறுகள் எண்ணிறந்தனவற்றையும்
நீந்தி வந்தால்; வயப்பொங்கு உரும் நினது ப்ர் உறு வேல் அஞ்சுக-அவ்விடத்தே வலியையுடைய
பெரிய இடியேறு நினது போராற்றல் மிக்க வேற்படையை அஞ்சி நின்பால் வாராதொழிக;
மஞ்சு இவரும் சூர் உறு சோலையின்வாய் தூங்கு இருள் வரற்பாற்று அன்று-ஆயினும் முகில்
பரவாநிற்கும் தெய்வங்கள் உறைகின்ற இச்சோலையிடத்தே செறிந்த இருளின்கண் வரும்
பான்மைத்தன்றே அத்தெய்வங்களை யாம் அஞ்சுகின்றோமாதலின் என்க.
(வி-ம்.)
தாருறை நீருறை போருறை சூருறை எனவும் பாடம். வரற்பாற்று அன்று என்பது வினைமேல் நின்றது.
நின் வேலிற்கு இடி அஞ்சி வாரா தொழியினும் ஒழிக. யாம் இச்சோலையில் உறையும் தெய்வம்
நினக்குத் தீங்கு செய்யும் என்று ஒருதலையாக அஞ்சுகின்றோம். ஆதலால் வாரற்க என்றவாறு.
சூர்-தெய்வம். தூங்கிருள்-செறிந்த இருள். மெய்ப்பாடு-அச்சம். பாயாண்-வாறாஈவூ காடாஆட்ஆள்.
காள்.-43
|