பக்கம் எண் :

672கல்லாடம்[செய்யுள்96]



கண்படுத்து-இன்றிரவு துயில்கொண்டு; இரவி கீறுமுன்-ஞாயிறு கால் சீக்குமுன்; எண்பட நும்பதி ஏகுதல் கடன்-நுங்கருத்து நிறைவேறும்படி நும்மூர்க்குச் செல்லுதல் முறைமையாம் என்க.

     (வி-ம்.) அனுங்குதல்-வருந்துதல். ஈண்டுத் தோற்பித்தல்-தலையைத் தொங்க விட்டுக்கொண்டு நின்ற யானை குடிலுக்குவமை. மரை-ஒருவகை மான.் சில்லிடம் என்றது சிறுமையான இடம் என்னும் பொருள்பட நின்றது. குடம்பை-குடில். அதன் தோல்-அந்த மானிந்தோல். கண்படுத்தல்-துயிலல். கீறுதல்-அகற்றல். இரவி இருளைக் கீறுமுன்னர் என்றவாறு. எண்-எண்ணம். கடன்-முறைமை.

     இதனை, வேலோய்! நின் தலைவி அவ்வதர்ப் பேய்த்தேர்க் கிடைந்தனள். சீயம் அதர்தொறுங் குழுவும்; கிராதரும் பலருளர்; சுடர்க் கடவுளும் மலைமறைந்தனன்; அன்பர்க்கருளும் கூடல்வரும் பரியோனாகிய எட்டெட்டியற்றிய சடையோனது சரணடைந்த மறுவிலர் போல நியும் அருளுடன் தமியை. வாடினை; (ஆதலால்) தினைச்சோறும் தேனும் முதலிய எமதில்லின்கண்ணுள்ளவற்றை யுண்டு இருவிரும் இற்றையிரவில் எமது குரம்பையிற் றுயின்று, விடியுமுன் நும் எண்ணப்படி நும்பதிக் கேகுதல் கடனாமென வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.