|
.....................அனைநிலை
வகையால் வரைதல் வேண்டினும் எனவரும் விதி கொள்க.
1
- 4: வெறி..............................நாட
(இ-ள்)
வெறி குறுங்கதுப்பின் வெள் எயிற்று எயிற்றியர்-நாற்றமுடைய குறிய கூந்தலையும் வெள்ளிய
பற்கலையும் உடைய எயிற்றராகிய பாலைநில மகளிர்; செம்மணி சுழற்றி தேன் இலக்கு எறிதர-சிவந்த
மாணிக்கக் கற்களைக் கவணில் வைத்துச் சுழற்றி தேன்கூடாகிய இலக்கின்கண் வீசுதலாலே;
பெருக்கெடுத்து இழிதரும் வெள்ளப்பிரசம்-அக்கூடுடைந்து ஒழுங்காநின்ற தேன்வெள்ளமானது;
கான்யாறு உந்தும் கல்வரை நாட-கான்யாற்றில் சென்று கலந்து அதன்கண் உள்ள நீரை விரைந்து
செலுத்துதற்கிடனான மலைநாட்டையுடைய பெருமானே! என்க.
(வி-ம்.)
வெறி-நாற்றம். குறுங்கதுப்பு-கூழையான கூந்தல். எயிற்றியர்-பாலைநில மகளிர். செம்மணி-மாணிக்கமணி.
கவணில்வைத்துச் சுழற்றி என்க. இலக்கு-குறி. பிரசம்-தேங் கான்யாறு-காட்டாறு. உந்துதல்-செலுத்துதல்.
கல்வரை: இரு பெயரொட்டு. 26: அடு வேலோயே
(இ-ள்)
அடுவேலோய்-பகைவரைக் கொல்லும் வேற்படையினை யுடையோய்! கேள் என்க.
(வி-ம்.)
அடும் வேர்படையை யுடையோயாயினும் என்பாள் அடுவேலோய் என மீண்டும் விளித்தாள்.
அடுதல்-கொல்லுதல்.
5
- 11: சொல்...............................குணங்கு
(இ-ள்)
சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர்புலன்-தமது சொற் சோர்விலேயே மகிழாநின்ற
பித்தர்களுடைய அறிவானது; சிறிது இடைத்தெருள்வதும் உடன்உடன் மருள்வதும் ஆம் எனக்
காட்டும்-சிறிது போழ்து தெலிவதும் இடையிட்டு மயக்குவதும் போலத் தோன்றா நின்ற;
அணி இடையிட்டு இருள் மின்னலின்-செறிந்த இருளின் ஊடே இடையிட்டு இடையிட்டுத் தோன்றும்
மின்னலையுடைய இவ்விரவின்கண்; நிணம் புணர் புகர்வேல் இணங்கு துணையாக-பகைவருடைய ஊன்
பொருந்துதலாலே புள்ளிகளையுடைத்தாய நினது வேற்படை ஒன்றுமே நினக்குப் பொருந்திய துணையாகக்கொண்டு;
காமம் ஆறு உள் கவர்தரும் வெகுளுநர் படிறு உளம்-காம முதலிய அறுவகைக் குற்றங்களானும்
கவரப்படுகின்ற நெஞ்சத்தையுடைய சினத்தையுடையவர்களுடைய பொய்ம்மையுடைய நெஞ்சத்தின்கண்;
கமழும் செறிதரும் தீ உறழ் கொள்ளிவாய்க்
|