பக்கம் எண் :

676கல்லாடம்[செய்யுள்97]



குணங்கு-மேலெழாநின்ற அடர்ந்த சினத்தீயையொத்த கொள்ளிவாய்ப் பேய்கள் என்க.

     (வி-ம்.) வேல்-புகருடைமைக்கு நிணம் புணர்தல் ஏது என்க. நிணம்-ஊங் புகர்-புள்ளி. இணங்குதுணை-பொருந்திய துணை. காமம் முதலிய ஆறாவன காமம், வெகுளி, இவறல், மயக்கம், தன்முனைப்பு, அழுக்காறு என்பன. வெகுளுநர்-பெயர். படிறு-பொய்மை. இடையறாது நிற்றலின் கமழும் தீ என்றார். தீ-சினத்தீ. உறழ்தல்-ஒத்தல். கொள்ளிவாய்க் குணங்கு-கொள்ளிவாய்ப்பேய். இதற்கு வெகுளுநர் நெஞ்சத்தில் எழும் சினத்தீ உவமை.

11 - 19: உள்ளுதோறு...............................போல

     (இ-ள்) உள்ளுதோறு இவரிய-நினைத்த இடங்களிலெல்லாம் செல்லுகின்ற; மின்மினி உமிழும் அலர் துன்கள்ளியை-மின்மினிகள் ஒளி வீசுகின்ற மலர் நிரம்பிய கள்ளி மரங்களை; அன்னை என்று அணைதரும் அரை யிருள் யாமத்து- எம்முடைய தாய் என்று உறவுகூறி எய்துகின நள்ளிரவாகிய இருட் பொழுதில்; கடுஞ்சுடர் இரவி விடும் கதிர்த்தேரினை-வெவ்விய சுடர்களையுடைய கதிரவன் செலுத்துகின்ற ஒளிமிக்க தேரினை; மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்து-தீமைக்கெல்லாம் காரணமாகிய அசுரர்கள் விண்ணுலகத்தை அழித்து; துணைக்கரம் பிடித்து எனத் தோற்றிடும் பொழில் சூழ்-இரு கைகளானும் பிடித்தாற்போலத் தோற்றுகின்ற சோலை சூழ்ந்துள்ள; கூடல்பதி வரும்-மதுரை நகரத்தில் எழுந்தருளிய; குணப்பெருங் குன்றினன்-குணங்களால் இயன்ற பெரிய மலையை யொத்த சிவபெருமானுடைய; தாமரைப்பழித்த இருசரண் அடையாக் கோளினர் போல-செந்தாமரை மலரை அழகாற் பழித்த திருவடி இரண்டினையும் அடையாத மடவோர் சொல்லைப்போல என்க.

     (வி-ம்.) கொள்ளிவாய்ப் பேய் கள்ளிமரங்களைத் தந் தாய் எனக் கருதி எய்துடற்கிடனான யாமம் என்றவாறு. உள்ளுதோறும்-தாம் நினைத்த இடங்களிலெல்லாம். இவர்தல்-பரவுதல். மின்மினி உமிழும் யாமம் முணங்கு அணைதரும் யாமம் எனத் தனித்தனி கூட்டினும் அமையும். அரை யாமம்; இருள் யாம என இயைக்க. பொழில் உயர்ந்து கதிரவன் தேரைத் தீண்டுதலால் அத்தோற்றம் அரக்கர் கதிரவன் தேரைக் கைகளாற் பிடித்தாற்போலத் தோன்றும் என்றவாறு. குணம்-எண்குணம். அவை முற்கூறப்பட்டன. கோள்-கொள்கை. அடையாமைக்குக் காரணமான கொள்கையுடையார் என்றவாறு.

19 - 24: குறிபல.....................................புணர

     (இ-ள்) பலகுறி குறித்து-பலகுறிகளை எண்ணி; ஐந்து அமர் கதுப்பினள்-ஐந்து பகுதியாக அமைந்த கூந்தலையுடைய எம்பெருமாட்டியின்; அமைத்தோள் நசைஇ-